- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்துக்காக நான் இப்பவும் ரொம்பவும் வருத்தப்படுகிறேன், அட நம்ம லப்பர் பந்து நடிகர் கெத்து...

அந்த விஷயத்துக்காக நான் இப்பவும் ரொம்பவும் வருத்தப்படுகிறேன், அட நம்ம லப்பர் பந்து நடிகர் கெத்து தினேஷூக்கு இப்படி ஒரு கவலையா? – இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!

- Advertisement -

சில நடிகர்கள் சிறந்த நடிகர்களாக இருப்பார்கள். அவர்கள் நடித்த ஒவ்வொரு படத்திலும் தங்களது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பர். ஆனால் அவர்களை சினிமா இயக்குனர்களும் அடையாளம் கண்டுக்கொண்டு சரியாக பயன்படுத்திக் கொள்ள மறந்து விடுவர். எனினும் தானாக அமையும் சில படங்கள் அவர்களை உச்சத்துக்கு கொண்டு சென்றுவிடும்.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தினேஷ். இந்த படமே அவரது அறிமுக படம் என்பதால், அட்டக்கத்தி தினேஷ் என்றால் உடனே சட்டென ஞாபகத்துக்கு வந்து விடுவார். முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்தார். காதல், காமெடி கலந்த அந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இதையடுத்து நடிகர் தினேஷ் அட்டக்கத்தி தினேஷ் என அழைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை என்ற படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு குக்கூ என்ற படத்தில் கண் பார்வை தெரியாதவராக அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது.

கண் பார்வையற்ற ஒருவரது செயல்களும், உடல் பாவனைகளும் அப்படியே தினேஷ் நடிப்பில் மிக சிறப்பாக வெளிப்பட்டது. அதே போல் ஒரு நாள் ஒரு கூத்து, அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட படங்களிலும் தினேஷ் நடித்தார். இப்போது தமிழரசு பச்சமுத்து இயக்கத்தில் அவர் நடித்துள்ள லப்பர் பந்து படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

பொதுவாக சில நடிகர்களின் முதல் படங்களே அவர்களது அடையாளமாகி விடுகிறது. உதாரணமாக நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, ஆடுகளம் நரேன், வெண்ணிற ஆடை மூர்த்தி, வெண்ணி ஆடை நிர்மலா என சிலரது பெயர்கள் அப்படியே அமைந்து விடுகின்றன. அதே போல் இவரை அட்டக்கத்தி தினேஷ் என்றே இன்றும் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி அழைத்து வருகின்றனர்.

அட்டக்கத்தி என்பது ஒரு கிண்டலான பெயர். அதில் வரும் நாயகன், உண்மையான கத்தியாக இல்லாமல், அட்டக்கத்தியாக ஏமாற்று பேர்வழியாக இருப்பார். ஆனால் அதே அட்டக்கத்தி பெயருடன் தினேஷை அழைப்பது அவருக்கு வருத்தத்தை தந்துள்ளது. அவர் கூறுகையில் அட்டக்கத்தி படத்துக்கு பிறகு விசாரணை, குக்கூ என பல படங்களில் நடித்துவிட்டேன். இன்னும் என்னை அட்டக்கத்தி தினேஷ் என அழைப்பது வருத்தமளிக்கிறது என்று கூறியிருக்கிறார். அதனால் இப்போது லப்பர் பந்து படத்தில் அவர் நடித்த கெத்து கேரக்டரில் கெத்து தினேஷ் என ரசிகர்கள் அழைக்க துவங்கி விட்டனர்.

- Advertisement -

சற்று முன்