- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது எனக்குதான் சொந்தம், இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் அப்படி சொன்னதால் விஜய்க்கு விட்டுக்கொடுத்தேன் - நடிகர்...

அது எனக்குதான் சொந்தம், இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் அப்படி சொன்னதால் விஜய்க்கு விட்டுக்கொடுத்தேன் – நடிகர் சரவணன் சொன்ன திடுக் தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நடிகராக பல படங்களில் நடித்தவர் சரவணன். அவர் நடித்த அபிராமி பொண்டாட்டி ராஜ்யம் சந்தோஷம் மாமியார் வீடு பார்வதி என்னை பாரடி உள்ளிட்ட பல படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அவர் வைதேகி வந்தாச்சு என்ற படத்தில்தான் அறிமுகமானார். அந்த படம் 1991ம் ஆண்டில் வெளியானது.

பிறகு 2003ம் ஆண்டில் தாயுமானவன் என்ற படத்தில் சரவணன் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து 2007ம் ஆண்டில் அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்தில் செவ்வாழை என்ற கேரக்டரில் கார்த்திக்கு சித்தப்புவாக நடித்து சூப்பர் கம்பேக் கொடுத்தார்.

- Advertisement -

இந்த படத்தில் நடித்த பிறகு தொடர்ந்து சரவணன் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ராயன் மருத நம்ம வீட்டுப்பிள்ளை கோலமாவு கோகிலா ஜெயிலர் என பல படங்களில் சரவணன் நடித்திருக்கிறார். இப்போது ஜீ5 ஓடிடி தளத்தில் சட்டமும் நீதியும் என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் சரவணன் முதன்மையான கேரக்டரில் நடித்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சரவணன் கூறியதாவது, நடிகர் விஜய் தனது பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் இளைய தளபதி பட்டத்துக்கு சொந்தக்காரனே நான்தான். நான் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த போது சேலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது திமுகவைச் சேர்ந்த வீரபாண்டி ஆறுமுகம்தான் எனக்கு இளைய தளபதி என்ற பட்டத்தை சூட்டினார்.

- Advertisement -

அதன் பிறகு நான் நடித்த படங்களில் இளைய தளபதி சரவணன் என்றுதான் டைட்டில் கார்டு போடப்பட்டது. ஆனால் நடிகர் விஜய் நடிக்க தொடங்கியபோது ஒரு படத்தில் அவரது பெயருக்கு முன்பு இளைய தளபதி பட்டத்தை போட்டு இருந்தார்கள். அதையடுத்து நான் அவரது தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரனை தொடர்பு கொண்டு அது குறித்து கேட்டேன்.

அப்போது அவர், உனக்கு தொடர்ந்து ஹீரோ வாய்ப்புகள் வந்தால் அந்த இளைய தளபதி பட்டத்தை விஜய் பயன்படுத்த மாட்டார் என்று கூறியிருந்தார். ஆனால் அதையடுத்து எனக்கு சரியான பட வாய்ப்புகள் வரவில்லை. அதனால் அந்த பட்டத்தை நடிகர் விஜயே பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன் என்று நடிகர் சரவணன் கூறி இருக்கிறார். ஆனால் நடிகர் விஜய் கடந்த பல ஆண்டுகளாக இளைய தளபதி என்பதில் இளைய என்பதை நீக்கிவிட்டு தளபதி என்று மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்