தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் இருவரும் கடந்த 45 ஆண்டுகளாக நண்பர்களாக இருப்பவர்கள். அதே வேளையில் சினிமாவில் ஒருவருக்கு ஒருவர் போட்டியாளர்களாகவும் இருந்து வருகின்றனர், ரஜினி, கமல் நட்புக்குள் இருந்தாலும், அவர்கள் படங்கள் போட்டியிட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. விகரம் விட ஜெயிலர் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்பட்டார் ரஜினி. இனி ஜெயிலரை விட இந்தியன் 2 ஹிட் ஆக வேண்டும் என நினைப்பார் கமல். இதுதான் யதார்த்தம்.
ரஜினி, கமல் என இருவரது படங்களில் யார் படம் ரிலீஸ் ஆனாலும், படம் வெற்றி பெற்றால் உடனடியாக ரஜினி கமலுக்கோ, கமல் ரஜினிக்கோ போன் செய்து, படம் வெற்றியடைந்ததற்கான வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வர். தொழிலில் போட்டி என்றாலும், நட்பில் அதை அவர்கள் நுழைய விடுவதில்லை. 45 ஆண்டுகால தமிழ் சினிமாவில் ரஜினி கமல் இருவரது தொழில் போட்டியும் அவர்களுடனே பயணிக்கிறது.
ரஜினி, கமல் ஆகிய இருவரையும் வைத்து படங்கள் இயக்கியவர் டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார். படத்தின் இயக்குநராக, அவரிடம் ரஜினி, கமல் இருவருமே பணி செய்தவர். ரஜினி நடித்த முத்து, படையப்பா, லிங்கா ஆகிய படங்களையும், கமல் நடித்த அவ்வை சண்முகி, தசாவதாரம், தெனாலி, மன்மதன் அம்பு படங்களை இயக்கியவர் கேஎஸ் ரவிக்குமார் தான்.
சமீபத்தில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் நேர்காணல் ஒன்றில் ரஜினி, கமல் குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பேசி இருந்தார், அவர் கூறுகையில், ரஜினி மாஸ்னா கமல் க்ளாஸ், இதுதான் ரெண்டு பேருக்கும் உள்ள பொதுவான டிபரன்ஸ். ரெண்டு பேருமே ரெண்டு விதமான மைண்ட் செட் உள்ள ஆளுங்க. ரெண்டு பேருமே, நமக்கு இதுதான் சரியான ரூட்டுன்னு பிக்ஸ் பண்ணிக்கிட்டவங்க.
ரஜினி தசாவதாரம் மாதிரி படம் கொடுத்தா பண்ண மாட்டாரு. அது அவரோட கோல் கிடையாது. ஆனா, அவர் பண்ற படங்களில் என்ன வித்யாசம் பண்ணலாமுன்னு பார்ப்பாரே தவிர, தசாவதாரம் மாதிரி பண்ண மாட்டாரு.
கமல் சார்கிட்ட ஆரம்பிக்கும்போதே, சகலகலாவல்லவன் மாதிரி கமர்ஷியல் படம் வந்திருந்தாலும், அந்த மாதிரி சொன்னா அதெல்லாம் வேண்டாங்க, ஏற்கனவே அதெல்லாம் வந்திருடுச்சுங்க, அப்படீன்னு அதுமாதிரி ஆயிரம் கதைகள் சொல்வாரு.
கமல் ஒரு மாதிரி மைண்ட் செட் வெச்சிக்கிட்டாரு. இன்னிக்கு யுஎஸ் சில இருக்கிற ஆடியன்ஸ் என்ன மாதிரி படம் லைக் பண்றாங்க. அந்த மாதிரி படங்களை இவங்களுக்கு எப்படி கொடுக்கறது அப்படீங்கற யோசனைலயே அவர் இருப்பாரு, என்று ரஜினி, கமல் குறித்த தனது அபிப்ராயங்களை கூறியிருக்கிறார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.





