- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை வைத்து இயக்க வேண்டிய படங்கள், இயக்குனர் வெற்றிமாறன் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன் -...

என்னை வைத்து இயக்க வேண்டிய படங்கள், இயக்குனர் வெற்றிமாறன் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன் – ஆதங்கப்பட்டு பேசிய நடிகர் சசிக்குமார்

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு இயக்குனராக, நடிகராக இருந்தவர் சசிக்குமார். சுப்ரமணியபுரம் என்ற படத்தை முதன்முறையாக டைரக்ட் செய்து நடித்தார். இந்த படத்தில் ஜெய், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தார். படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் என்ற படத்தில் நடிகர் சசிக்குமார் நடித்தார். இந்த படத்தில் சசிக்குமார், கஞ்சா கருப்பு, பரணி, ராஜா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சசிக்குமார் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

- Advertisement -

தொடர்ந்து சுந்தரபாண்டியன், பேட்ட, ஈசன், நாடோடிகள் 2 என பல படங்களில் நடித்த சசிக்குமாருக்கு சமீபத்தில் வெளியான அயோத்தி படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. சூரி நடித்த கருடன் படத்திலும் சசிக்குமார் நடிப்பு வரவேற்பை பெற்றது. இப்போது இயக்குனர் சரவணன் இயக்கத்தில் வெளியாகி உள்ள நந்தன் என்ற படம், நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சசிக்குமார் கூறியதாவது, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்ட ஒரு படத்தில் நான் நடிக்க இருந்தேன். இந்த படத்தை இயக்க அனைத்து டிஸ்கஷன்களும் நடந்த நிலையில், சில காரணங்களால் அந்த படம் இயக்கப்படாமல் கைவிடப்பட்டது.

- Advertisement -

அதே போல் என்னையும், இயக்குனர் அமீரையும் வைத்து ஒரு படம் இயக்க டைரக்டர் வெற்றிமாறன் திட்டமிட்டார். அந்த படமும் சில காரணங்களால் எடுக்க முடியாமல் கைவிடப்பட்டு விட்டது, என்று அந்த நேர்காணலில் சசிக்குமார் கூறியிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்திருந்தால், சசிக்குமார் இன்னும் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் பேசப்பட்டு இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுப்ரமணியபுரம் படத்தில் நானும், ஜெய்யும் நடித்த கேரக்டர்களில் முதலில் நான் நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டது நடிகர் ரஜினி, கமல் இருவரையும்தான். அவர்களை நினைத்துதான் அழகர், பரமன் கேரக்டர்களை உருவாக்கினேன். அடுத்தடுத்து 7 படங்களை நான் தயாரித்ததால் நிறைய கடன்களில் சிக்கிக் கொண்டேன். அதில் இருந்து மீண்டு வரவே பல ஆண்டுகள் ஆகி விட்டன என்றும் அந்த நேர்காணலில் சசிக்குமார் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்