- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் கல்லூரிகளுக்கு செல்வதை தவிர்ப்பேன், அதற்கு காரணம்…? - மாணவ மாணவியர் மத்தியில் வெளிப்படையாக பேசிய...

நான் கல்லூரிகளுக்கு செல்வதை தவிர்ப்பேன், அதற்கு காரணம்…? – மாணவ மாணவியர் மத்தியில் வெளிப்படையாக பேசிய நடிகர் சசிக்குமார்!

- Advertisement -

நடிகர் சசிக்குமார் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். சுப்ரமணியபுரம் படத்தை அவரே இயக்கி நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடித்திருந்தார். அடுத்து சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தில் சசிக்குமார் நாயகனாக நடித்திருந்தார். இவர்கள் இருவருமே இயக்குனர் அமீரிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர்கள்.

மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சசிக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது மாணவ மாணவியர் மத்தியில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து சசிகுமார் பேசியதாவது, இந்த கல்லூரிக்கு பக்கத்து ஊரில் தான் என் வீடு உள்ளது. அடிக்கடி இந்த வழியாகத்தான் நான் செல்வேன்.

- Advertisement -

இவ்வளவு பெரிய கல்லூரி இருக்கிறது என்பதே இப்போதுதான் எனக்கே தெரிகிறது. மேடையில் பேச வேண்டும் என்பதற்காகவே பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான் செல்வதில்லை. அதுவும் கல்லூரிக்கு செல்லும் போது மாணவர்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டும். அதனால் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்ப்பேன்.

என்னை இங்கு அழைத்துக் கொண்டு வரவில்லை, இழுத்து வந்துள்ளார்கள். நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே. அதற்காகத்தான் இங்கு வந்துள்ளேன். எனக்காக இதை செய்யுங்கள் என்ற நண்பன் கேட்டதால் இங்கு வந்துள்ளேன். நண்பன் கேட்டால் உயிரையும் கொடுப்போம்.

- Advertisement -

வாழ்வில் நட்பை விட்டு விடாதீர்கள். நான் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன். குத்துனது நண்பனா இருந்தாலும் செத்தாக்கூட சொல்லக்கூடாது. நான் நடித்த அயோத்தி திரைப்படம் மனிதத்தை பேசுகிறது. மொழி மதம் ஜாதிகளை கடந்து நமக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே உதவக் கூடாது, தெரியாதவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற கருத்துள்ள படம் தான் அயோத்தி.

மனிதம் நமக்குள் என்றும் இருக்க வேண்டும். அடுத்த படத்தை மதுரையில் தான் இயக்க உள்ளேன். காதலா நட்பா என்று பார்த்தால் எப்பவுமே நட்புதான் காதலாக இருக்கும், காதல் நட்பாக இருக்காது. மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள் என்று அந்த விழாவில் நடிகர் சசிக்குமார் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்