ஒரு மொழியில் எடுக்கப்படும் படத்தை, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டால், அது பிறமொழிகள் பேசும் மாநிலங்களிலும் சினிமா ரசிகர்களை சென்றடைகிறது. அத்தகைய படங்களை பான் இந்தியா படங்கள் என கொண்டாடுவதும், அந்த படத்தில் நடித்த ஹீரோக்களை பான் இந்தியா ஸ்டார்ஸ் என கொண்டாடுவதும் இப்போது நடக்கிறது.
ஜெயிலர் படம் மூலம் ரஜினி, விக்ரம் படம் மூலம் கமலும், லியோ படம் மூலம் விஜய் என, பான் இந்தியா ஸ்டார்களாக மாறிவிட்டனர். அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், பிரபாஸ், ராம்சரண், ஜூனியர் என்டிஆர், யாஷ், பிஷப் ஷெட்டி, போன்றவர்களும் பான் இந்தியா ஸ்டார்களாக ஏற்கனவே பார்க்கப்படுகின்றனர். ஆனால், உண்மையில் இவர்கள் டப்பிங் ஸ்டார்கள் என்பதே சரி. ஏனெனில், பல படங்கள் டப்பிங் மொழி மாற்றம்தான் செய்யப்படுகின்றன.
தமிழ் சினிமாவில், வில்லனாக அறிமுகமானவர் சத்யராஜ். கோவையை சேர்ந்தவர். கொங்கு தமிழ் பேசுபவர். மணிவண்ணன் இயக்கிய படங்களால், ரசிகர்களின் மனதில் எளிதாக இடம்பிடித்தார். பாரதிராஜா இயக்கிய கடலோர கவிதைகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோ ஆனார். பல படங்களில் ஹீரோவாக நடித்து, இப்போது வில்லன், குணச்சித்திரம், காமெடி என நடித்து வருகிறார்.
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில், பாகுபலி படத்தில் கட்டப்பா படத்தில் நடித்த சத்யராஜ், வட இந்தியாவில் நல்ல அறிமுகத்தை பெற்றார். அதைத் தொடர்ந்து பிற மொழி படங்களில், பல வெப் சீரிஸ்களில் சத்யராஜ் நடித்து வருகிறார். இந்நிலையில், அந்த வெப்சீரிஸ் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாகி விட்டார்.
இப்போது நார்த் சைடில் நடத்திய ஆய்வில், சத்யராஜூக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சத்யா ஏஜன்சி வணிக நிறுவனம், தனது நிறுவனத்தின் பிராண்டட் அம்பாஸிடராக நியமனம் செய்துள்ளது. சத்யராஜை வைத்து, விளம்பரம் எடுத்து பல மொழிகளில் வெளியிட இருக்கிறது.
இப்போது பல படங்களில், வெப் சீரிஸ்களில் பிஸியாக நடித்துவரும் சத்யராஜ், இந்நிறுவனத்தின் விளம்பர படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு, மொபைல் டப்பிங் வாகனத்தை ஷூட்டிங் ஸ்பாட்டிங்குக்கே வரவழைத்து, டப்பிங் பேசி தந்திருக்கிறார். அந்த விளம்பரம் ஏழு அல்லது 11 மொழிகளில் டப் செய்யப்பட உள்ளதாம். சினிமாவில் மட்டுமின்றி, விளம்பரத்திலும் சத்யராஜ்தான் பான் இந்தியா ஸ்டார் என்று சினிமா ரசிகர்கள் கூறுகின்றனர்.





