- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த படத்துல நீங்க நடிச்சதுல எனக்கு உடன்பாடு இல்லே, நீங்க நடிச்சிருக்க கூடாது - வெளிப்படையாக...

இந்த படத்துல நீங்க நடிச்சதுல எனக்கு உடன்பாடு இல்லே, நீங்க நடிச்சிருக்க கூடாது – வெளிப்படையாக சத்யராஜிடம் சொன்ன கேப்டன் விஜயகாந்த்!

- Advertisement -

நடிகர் சத்யராஜ் நடித்த அமைதிப்படை படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் அரசியல்வாதியாகவும் சத்யராஜ் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய இந்த படம் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேர்தல் நேரத்தில் திரைக்கு வருகிறது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ் கூறியதாவது, நான் நடித்த படங்களில் எனக்கு பெரிய வரவேற்பை பாராட்டை பெற்றுத் தந்த படம் என்றால் அது அமைதிப்படை தான். நடிகர் விஜய் கூட ஒருமுறை அமாவாசை சத்யராஜ் போன்ற கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்காக விஜய்க்கு போனில் அழைத்து நான் நன்றி சொன்னேன்.

அமைதிப்படை படத்தை பார்த்து விட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நீ நடிகன்டா நல்லா நடிச்சிருக்கே என்று பாராட்டினார். எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துகிட்டதுதான் தான் அப்பா என்று சொன்னேன். பிறகு ரஜினி சார் படம் பார்த்து விட்டு பாராட்டினார். எப்படி இப்படி தைரியமா அரசியல் பேசி நடிச்சீங்க என்றார்.

அதற்கு நான் அவரிடம், நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்னை வந்தால் இயக்குனர் மணிவண்ணன்தான் காரணம் என்று நான் அவர் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்வேன். அதே போல் அவரிடம் யாராவது கேட்டால் சத்யராஜ் தான் அப்படி பேசி நடித்து விட்டார் என்று என் மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்வார் என்று ஜாலியாக சொன்னேன்.

ஆனால் அமைதிப்படை படத்தை பார்த்து விட்டு விஜயகாந்த் தான் என் மீது வருத்தப்பட்டார். ஆரம்பத்தில் வில்லனாக நடித்துவிட்டு இப்போது ஹீரோவாக முன்னணி நடிகராக வந்துட்டீங்க? இப்போ எதுக்கு மறுபடியும் வில்லனா நடிச்சு ரசிகர்களுக்கு அதை ஞாபகப்படுத்தறீங்க?

இந்த படத்துல நீங்க நடிச்சதுல எனக்கு உடன்பாடு இல்லேன்னு என்கிட்ட நேரடியாகவே சொல்லிட்டார். இல்லே விஜி, அப்படி இப்படின்னு சொல்லி அவரை சமாதானம் செய்ய முயற்சித்தேன். ஆனால் விஜயகாந்த் அதை ஏத்துக்கலே. நான் ஹீரோவாக வளர்ந்த பிறகு வில்லனாக நடித்தது என் கேரியரை பாதிக்கும் என்பதால் கேப்டன் அப்படி வருத்தப்பட்டார் என்று நடிகர் சத்யராஜ் கூறியிருக்கிறார்.

சற்று முன்