- Advertisement -
Homeபொழுதுபோக்குஎந்த கடவுளும் என் கோரிக்கையை நிறைவேத்தலே, எந்த சாமியும் என்னை கண்டுக்கலே - கடைசியில் அந்த...

எந்த கடவுளும் என் கோரிக்கையை நிறைவேத்தலே, எந்த சாமியும் என்னை கண்டுக்கலே – கடைசியில் அந்த சாமி தான் காப்பாத்துச்சு – நடிகர் சத்யராஜ் ஓபன்டாக்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் சத்யராஜ். பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர் கடந்த பல ஆண்டுகளாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பெரியார் கொள்கைகளை பின்பற்றும் பகுத்தறிவாளராக தன்னை சத்யராஜ் வெளிப்படுத்தி வரும் நிலையில், ஆரம்பத்தில் அவர் தீவிர கடவுள் பக்தராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சத்யராஜ் கூறியதாவது, எனக்குத் தலையிலே முடி கொட்ட ஆரம்பித்தவுடனே நான் போகாத கோயில் இல்லை, வேண்டாத சாமி இல்லை. எல்லா மதத்தைச் சார்ந்த கோவிலுக்கும் போனேன். சாமி சாமி தலைக்கு மேலே எப்படியாவது முடியை வளர வை என்று சொல்லி நான் உலகத்தில் உள்ள எல்லா கோவிலுக்கும் சென்று விட்டு வந்துவிட்டேன்.

- Advertisement -

ஒரு சாமியும் நான் சொன்ன பேச்சைக் கேட்கவில்லை. தலைக்கு மேலே முடி வளரவில்லை. அப்போது கருப்புச் சட்டைப்போட்ட தொண்டர் ஒருவர் வந்து என்ன பிரச்சினைங்க என்று என்னிடம் கேட்டார். இல்லீங்க, தலையில் முடி கொட்டிடுச்சிங்க என்று சொன்னேன். அவர் என்னிடம் நீங்கள் என்ன தொழில் பண்றீங்க என்று கேட்டார்.

நான் சினிமாவிலே நடிக்கிறேன் என்று சொன்னேன். சினிமாவில் தலையில் டோப்பா வாங்கி வைத்துக் கொள்ளலாமே, தலையில் முடி இல்லை என்பதற்காக ஏன் வருத்தப்படுகிறீர்கள்? நான் ஒரு சாமியிடம் அழைத்துக் கொண்டு போகிறேன். அந்த சாமி தலைக்கு மேலே முடியை வளர வைக்குமா என்று தெரியவில்லை. தலைக்கு உள்ளே இருக்கிற மூளையை வளர வைக்கும் அப்படீன்னு சொன்னார்.

- Advertisement -

அப்படி அவர் சொல்லி ஒரு சாமிக்கிட்டே என்னை அழைத்துக் கொண்டு போனார். அந்த சாமிதான் தந்தை பெரியார் என்ற ஈ வே ராமசாமி. அப்புறம்தான் பெரியாருடைய புத்தகங்களைப் படித்தேன். அந்த உருவத்தைக் கும்பிடவில்லை. அப்படி கும்பிட வேண்டிய அவசியமில்லை.

அவர் சொன்ன விஷயங்களையும், அவருடைய தத்துவங்களையும் அவருடைய புத்தகங்களையும் படித்தேன். தலைக்கு மேலே முடி வளருதோ இல்லையோ தலைக்கு உள்ளே வளர்ந்து விட்டது. இப்படிதான் நான் பகுத்தறிவு கருத்துகளால் என்னை மாற்றிக்கொண்டேன் என்று அந்த நேர்காணலில் நடிகர் சத்யராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்