- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக தலைவர் நடிகர் விஜய் உள்பட பவுன்சர்கள் 10 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு...

தவெக தலைவர் நடிகர் விஜய் உள்பட பவுன்சர்கள் 10 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு – தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

- Advertisement -

மதுரையில் உள்ள பாரபத்தியில் கடந்த 21ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2வது மாநில மாநாடு நடந்தது. கடந்தாண்டில் தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலையில் நடந்தது. இதைத்தொடர்ந்து தவெக கட்சியின் 2வது மாநில மாநாடு மதுரையில் கடந்த 21ம் தேதி நடந்தது. லட்சக்கணக்கான தொண்டர்கள், கட்சியினர் திரண்ட இந்த மாநாடு கூட்டத்தில் நடிகர் விஜய் பங்கேற்று பேசினார்.

அப்போது மாநாட்டு திடலில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் இருந்த அனைவரும் நடிகர் விஜயை பார்க்க மாநாட்டு திடலில் நீளமான ரேம்ப் வாக் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த வழியாக நடிகர் விஜய் அப்போது நடந்து வந்தார். திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார்.

- Advertisement -

அப்போது அங்கு திரண்டிருந்த கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள், வேகமாக ரேம்ப் வாக்கில் ஏறி நடிகர் விஜயை அருகில் பார்க்கவும் கை குலுக்கவும் ஓடி வந்தனர். அப்போது நடிகர் விஜய்க்கு பாதுகாப்பாக நடந்து வந்த பவுன்சர்கள் அவர்களை தடுத்து பிடித்து அவர்களை அப்புறப்படுத்தினர். அப்போதும் ஒரு ரசிகர், விஜயை காலை இறுகப் பற்றிக்கொண்டு விடவில்லை.

பிறகு அங்கிருந்த பவுன்சர்கள் அந்த இளைஞரை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து விஜய் காலை விடுவிக்க செய்தனர். அதே போல் மற்றொரு இளைஞர் விஜயை நோக்கி அருகே வந்த போது, விஜய்க்கு அருகில் இருந்த பவுன்சர் ஒருவர் அந்த இளைஞரை அப்படியே அலேக் ஆக தூக்கி வீசி எறிந்தார்.

- Advertisement -

ஆனால் அந்த இளைஞர் அங்கிருந்த கம்பியை பிடித்து தொங்கி பின் பாதுகாப்பாக இறங்கி விட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. என்னதான் இருந்தாலும் பவுன்சர் இப்படி வாலிபரை தூக்கி வீசியது தவறு என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தவெக மதுரை மாநாட்டில் ரேம்ப் வாக்கில் பவுன்சரால் தூக்கி வீசப்பட்ட பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையத்தை சேர்ந்த சரத்குமார் என்பவர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். இதையடுத்து அந்த புகாரை ஏற்றுக்கொண்ட குன்னம் போலீசார் நடிகர் விஜய் உள்ளிட்ட 10 பவுன்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இது விஜய் ரசிகர்கள் தவெக தொண்டர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்