தமிழ் சினிமாவில் நடிகர்களின் மகன்கள், மகள்கள் நடிகைகளின் மகள்கள், மகன்கள் படங்களில் நடிக்க ஆர்வமாக வருகின்றனர். தங்களது சினிமா வாரிசுகளாக அவர்களை களத்தில் இறக்கி விடுகின்றனர் மூத்த நடிகர்கள். இதில் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் என பிறமொழிகளிலும் நடந்து வருகிறது.
அதே போல் இயக்குனர்களின் மகன்களும் சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சில நேரங்களில் இயக்குனர்களே தங்களது மகனை சினிமாவில் அறிமுகம் செய்கின்றனர். இப்படித்தான் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் மகன் விஜய் சினிமாவில் வாரிசாக வந்தார். இயக்குனர் கஸ்தூரிராஜா மகன் தனுஷ் நடிகராக வந்தார். இயக்குனர் பாசில் மகன் பகத் பாசில் நடிகரானார். இப்படி பல பேரை குறிப்பிட்டு சொல்லலாம்.
அந்த வகையில் இயக்குனர் பி. வாசுவின் மகன் சக்தி தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். சின்னத்தம்பி மன்னன் சந்திரமுகி போன்ற மாபெரும் வெற்றி படங்களை தந்த பி. வாசுவின் மகன் சக்தி வாசுதேவன். இவர் குழந்தை நட்சத்திரமாக சின்னதம்பி, ரிக்ஷா மாமா, பிரம்மா போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களை நடித்து சக்தி பிரபலமானவர். அதன் பிறகு விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக சக்தி கலந்து கொண்டார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் சில டாஸ்க்குகளுக்காக அவர் நடந்து கொண்ட விதத்தை பார்த்து பலரும் அவரை வெறுக்க ஆரம்பித்தனர். அவர் மீது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
ஒரு கட்டத்தில் சக்தி அந்த நிகழ்ச்சியில் வில்லனாக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டார். அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு வெளியிடங்களுக்கு செல்வதை சக்தி தவிர்க்க ஆரம்பித்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணல் பேசிய சக்தி இது குறித்து கூறுகையில், நான் என் சிறுவயதிலிருந்தே தோல்வி அடைந்தது இல்லை. எதிலுமே நான் பெயிலானது கிடையாது. அவ்வாறுதான் நான் நன்றாக எம்பிஏ வரை படித்தேன்.ஆனால் இந்த சினிமா துறைக்கு வந்த பிறகு பல தோல்விகளை கண்டு விட்டேன்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. என் அப்பா அந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தி கூறினார். ஆனால் நான் அதைக் கேட்காமல் பிடிவாதமாக சென்றேன். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு, சில பிரச்சினைகளால் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். அப்போது நடிகர் ரஜினிகாந்த் என் அப்பாவிற்கு போன் செய்து என்னைப் பற்றி விசாரித்தார். என்னிடம் மீண்டும் சினிமாவில் நடிக்க வரும்படி கேட்டுக் கொண்டார் என்று அந்த நேர்காணலில் சக்தி கூறி இருக்கிறார்.





