- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க 100 கோடி ரூபாய் சம்பளம் கூட வாங்கலாம், ஆனா விஜய் ஆக முடியாது -...

நீங்க 100 கோடி ரூபாய் சம்பளம் கூட வாங்கலாம், ஆனா விஜய் ஆக முடியாது – நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பகிரங்கமாக விமர்சித்த பிரபல நடிகர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இப்போது விஜய் தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. எச் வினோத் இயக்கத்தில் :உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய உள்ளது.

இதுதான் நான் நடிக்கும் கடைசி படம் என நடிகர் விஜய் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய நடிகர் விஜய், கடந்த சில தினங்களுக்கு முன் தனது கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்றார். அப்போது தேர்தல் வியூக ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரும் அந்த விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் விஜய் விலகும் நிலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ஒரு படத்தை அவர் இயக்குகிறார் என்றாலும், நடிகராக விஜயின் வாரிசு களத்தில் இறங்காமல் தன் தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் போல இயக்குனராக களத்தில் இறங்கியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

தமிழ் சினிமாவில் இனி அடுத்து விஜய் இடத்தை பிடிக்கப் போவது நடிகர் சிவகார்த்திகேயன்தான் என்று பல மாதங்களாக தகவல் பரவி வருகிறது. தி கோட் படத்தில் கேமியோ ரோலில் நடித்த சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை பிடிங்க சிவா என்று விஜயே கூறி துப்பாக்கியை அவரது கையில் கொடுத்து அதை உறுதிபடுத்தி விட்டார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் ஷாம் இதுகுறித்து பேசியிருக்கிறார். ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே 12பி வாரிசு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஷாம். அவர் கூறியதாவது, விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன்தான் என்று பலரும் கூறிக்கொண்டு இருக்கின்றனர். ஆனா அந்த ஆசை சிவாவுக்கே இல்லை.

விஜய் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. ஆனா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிவகார்த்திகேயனுக்கு ஒரு வரவேற்பு இருக்கிறது. ஆனா அதுக்காக அவர் அடுத்த தளபதியா ஆகிட முடியாது. நீங்க 100 கோடி ரூபாய் சம்பளம் கூட வாங்கலாம். ஆனா அடுத்த விஜய் ஆக முடியாது என்று நடிகர் ஷாம் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பகிரங்கமாக விமர்சித்து பேசியிருக்கிறார்.

சற்று முன்