- Advertisement -
Homeபொழுதுபோக்குபல சிறந்த நடிகர்களை தமிழ் சினிமாவுக்கு தந்த இயக்குனர் கே பாக்யராஜ், அவரது வாரிசுக்கே இப்படி...

பல சிறந்த நடிகர்களை தமிழ் சினிமாவுக்கு தந்த இயக்குனர் கே பாக்யராஜ், அவரது வாரிசுக்கே இப்படி ஒரு சோதனையா? வருத்தப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1980, 90களில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கே பாக்யராஜ். அவரது இயக்கத்தில் அவரே பெரும்பாலும் நாயகனாக நடித்திருக்கிறார். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தனது கலையுலக வாரிசு என அறிவித்த பெருமைக்குரியவர். இன்னும் இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமை கே பாக்யராஜூக்குதான் உள்ளது.

ஆரம்பத்தில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர் கே பாக்யராஜ். 16 வயதினிலேயே படத்தில் கவுண்டமணியை ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க செய்தவர் உதவி இயக்குனராக கே பாக்யராஜ். கவுண்டமணியை பார்க்கவே பிடிக்கவில்லை என்று மறுத்த பாரதிராஜாவை சமாதானப்படுத்தி கவுண்டமணியை நடிக்க வைத்தவர் அவர்தான்.

- Advertisement -

பிறகு சுவரில்லாத சித்திரங்கள் படத்தில், பெட்டிக்கடை டெய்லர் காளியண்ணன் கேரக்டரில் கவுண்டமணி நடிப்பு இன்றும் ரசிகர்களால் பேசப்படுகிறது. சரோஜா குப்பை கொட்றியா, கொட்டு கொட்டு வசனம் இப்போதும் டிரெண்டிங் உள்ளது. அதே போல் பொய்சாட்சி படத்தில் நடிகர் செந்திலை அறிமுகப்படுத்தியதும் கே பாக்யராஜ்தான்.

அதே போல் பாண்டியராஜன், பார்த்திபன், லிவிங்ஸ்டன், ஆர்பி விஸ்வம், ஜூனியர் பாலையா, கோவை சரளா, சிஆர் சரஸ்வதி, செம்புலி ஜெகன் என பல நல்ல கலைஞர்கள் பாக்யராஜ் மூலம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்கள். சில நல்ல கலைஞர்களை தொடர்ந்து தனது படங்களில் கே பாக்யராஜ் நடிக்க வைத்து அவர்களுக்கு வாய்ப்பு தந்திருப்பார்.

- Advertisement -

பல கலைஞர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய, அவர்களை முன்னணி நட்சத்திரங்களாக உருவாக்கிய கே பாக்யராஜ் மகன் சாந்தணு. அவரது கலைவாரிசான அவர் தமிழ் சினிமாவில் இதுவரை முக்கிய இடத்தை பெற முடியாமல் இருக்கிறார். சில வெற்றிப் படங்களில் நடித்தும் அவருக்கான முக்கியத்துவம், அங்கீகாரம் இன்னும் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. இந்த வருத்தம் கே பாக்யராஜூக்கும் உள்ளது.

இந்நிலையில் தற்போது சாந்தனு, மலையாள படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இயக்குனர் உன்னி சிவலிங்கம் இயக்கும் ஒரு மலையாள படத்தில் நாயகனாக ஷானே நிகம் நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சாந்தனு நடிக்கிறார். அவருடன் அயோத்தி படத்தில் நடித்த நடிகை ப்ரீத்தி அன்சு அன்சாரி என்பவரும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. மலையாளத்தில் சாந்தனுவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்