நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் திரிஷா நடித்திருந்தார். இதற்கு முன்பே திரிஷா 4 படங்களில் விஜயுடன் நடித்திருக்கிறார். திருப்பாச்சி, கில்லி, குருவி, ஆதி ஆகிய படங்களில் திரிஷா ஜோடியாக நடித்த நிலையில் திருப்பாச்சி, கில்லி இரண்டுமே பெரிய ஹிட் படங்களாக இருந்தன. ஆதி, குருவி படங்கள் ஓடவில்லை.
இதுவரை எந்த படத்திலும் நடிகை திரிஷா ஐயிட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டது இல்லை. அவருக்கு மார்க்கெட் நிலவரம் குறைந்து, பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த காலகட்டத்தில் கூட, சில படங்களில் குத்தாட்டம் போட வந்த வாய்ப்பை கண்டிப்பாக மறுத்து விட்டார். நான் நாயகியாக இல்லாமல், வேறு ஒரு நாயகி நடிக்கும் படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாட வரமாட்டேன் என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
ஆனால் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் மட்டும், நடிகர் விஜயுடன் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார் நடிகை திரிஷா. மட்ட பாடலுக்கு மஞ்சள் ஸாரியில் வந்து திரிஷா போட்ட குத்தாட்டம், கில்லி படத்தில் வந்த அப்படிப்போடு பாடலை நினைவுபடுத்தியது. எனினும் அந்த அளவுக்கு திரிஷா இந்த பாடலில் ரசிகர்களை மனம் கவரவில்லை.
இந்த சூழலில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது கடைசி படமான எச் வினோத் இயக்கும் படத்தில், திரிஷா தான் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார்கள் என்று ரசிகர்களால் பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமந்தா, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, சிம்ரன் என 4 கதாநாயகிகள் இந்த படத்தில் நடிப்பதால், திரிஷா ஒதுங்கிக் கொண்டதாக கூறப்பட்டது.
அதே நேரத்தில் விஜய் 69 படத்தில் மமிதா பைஜூ விஜய்க்கு தங்கையாக நடிக்கிறார். சிம்ரன், சமந்தா முக்கிய கேரக்டரில்தான் நடிக்கின்றனர். ஆனால் படத்தில் விஜய்க்கு ஜோடியாக வருவது நடிகை பூஜா ஹெக்டே தான் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமந்தா விஜயுடன் நடித்த கத்தி, தெறி படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக இருந்துள்ளன.
ஆனால் நெல்சன் இயக்கத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்த பீஸ்ட் படம் விஜய்க்கு மிகப்பெரிய தோல்விப் படமாக இருந்தது. அதனால் தோல்வி பட நாயகியை தனது கடைசி படத்தில் விஜய் நடிக்க சம்மதிக்கிறாரே என்ற ஒரு தகவல் பரவியது. ஆனால், விஜய் கிட்ட அந்த சென்டிமென்ட் எல்லாம் கிடையாது. பழைய வெற்றி, தோல்வி எல்லாம் கணக்கில் எடுத்துக்க மாட்டார். அவர் லெவலே வேறதான் என்று தளபதி ரசிகர்கள் கெத்தாக கமெண்ட் செய்து வருகின்றனர்.





