மலையாள சினிமாவில் ஆகச்சிறந்த ஒரு கலைஞராக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் நடிகர் பகத் ஃபாசில். அழுத்தமான கேரக்டர்களை மிக நேர்த்தியாக கையாளும் ஒரு திரைக்கலைஞர். எந்த கேரக்டர் என்றாலும் அதில் தனது தனித்துவமான நடிப்பை ஆழமாக பதிப்பது இவரது ஸ்பெஷாலிட்டி. இவரை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் உள்ளது.
நடிகர் பகத் ஃபாசில் பிரபல இயக்குனர் ஃபாசில் மகன்தான். தமிழில் வெளியான காதலுக்கு மரியாதை கண்ணுக்குள் நிலவு என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு பூவிழி வாசலிலே பூவே பூச்சூடவா வருஷம் 16 போன்ற படங்களின் டைரக்டர் ஃபாசில்தான். அவரது மகன்தான் நடிகர் பகத் ஃபாசில்.
மேலும் நடிகர் பகத் ஃபாசில் மனைவியும் ஒரு பிரபல நடிகைதான். தமிழில் ராஜா ராணி நையாண்டி போன்ற படங்களில் நடித்த நஸ்ரியா தான் பகத் ஃபாசிலின் மனைவி. அடுத்ததாக சூர்யா நடிக்கும் 47வது படத்தில் நஸ்ரியா தான் நாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்தை பகத் ஃபாசில் நடித்த ஆவேசம் படத்தை இயக்கிய ஜீத்து மாதவன்தான் டைரக்ட் செய்ய உள்ளார்.
பகத் ஃபாசில் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் ஒரு முக்கிய நட்சத்திர நடிகராக இருந்து வருகிறார். சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் அறிமுகமான அவர் தொடர்ந்து விக்ரம் மாமன்னன் வேட்டையன் சமீபத்தில் வெளியான மாரீசன் என தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன.
இந்நிலையில் சமீபகாலமாக பகத் ஃபாசில் பயன்படுத்தும் போன் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு படத்தில் நடிக்க பல கோடி ரூபாய் வரை பகத் ஃபாசில் சம்பளம் வாங்குகிறார். தமிழில் அவர் ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் மிக சாதாரணமாக பட்டன் போன் பயன்படுத்துவதாக தகவல் வெளியானது.
சாதாரண மக்களே ஆண்ட்ராய்டு மற்றும் ஐ போன் பயன்படுத்தும் இன்றைய சூழலில் இந்திய அளவில் கவனம் பெற்ற ஒரு நடிகர் பகத் ஃபாசில் இப்படி எளிமையாக பட்டன் போன் பயன்படுத்துகிறாரே என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், அதுபற்றிய லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் பகத் ஃபாசில் பயன்படுத்தும் பட்டன் போன், வெளிநாட்டு நிறுவனம் தயாரித்த மிக நவீன போன் என்றும் அதன் விலையே இந்திய மதிப்பில் ரூ. 10 லட்சம் என்றும் கூறப்படுகிறது.





