நடிகர் சிலம்பரசன், நடிகர் டி ராஜேந்தரின் மூத்த மகன். குறளரசன், இலக்கிய என இன்னும் 2 பிள்ளைகள் டி ராஜேந்தர் – உஷா தம்பதிக்கு உள்ளனர். அவர்கள் 2 பேருக்குமே திருமணமாகி, குழந்தைகள் இருக்கிறது. பெரியப்பா, மாமா ஆன சிலம்பரசன், இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாகவே இருந்து வருகிறார்.
அப்பா டிஆரை போலவே, சிலம்பரசனும் கலைத்துறையில் ஒரு நல்ல கலைஞனாக இருந்து வருகிறார். அப்பாவை போலவே நடிப்பு, பாட்டு, நடனம், இசை, டைரக்ஷன் என சகலத்துறை வல்லுனராக தான் இருக்கிறார். ஆனால் டிஆரிடம் இருக்கும் தொழில் பக்தி, அர்ப்பணிப்பு சிம்புவிடம் இல்லை என்ற குறையை பலரும் கூறி வருகின்றனர்.
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தாமதமாக வருவது, சில நாட்களில் வராமலேயே இருந்து விடுவது, படப்பிடிப்புக்கு போதிய ஒத்துழைப்பு தராதது என பல குறைபாடுகள் சிம்புவிடம் காணப்படுகிறது. இதே போல் பல ஆண்டுகளுக்கு முன், நவரச நாயகன் கார்த்திக்கும் இந்த புகார்களுக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலம்பரசன் தொழிலில் தீவிரமும் ஆர்வமும் காட்டியிருந்தால் அவர் இப்போது இருக்கும் பொசிஷனை விட விஜய், அஜீத்குமார் அளவுக்கு கூட முன்னணி நடிகராக வந்திருக்க கூடும். நடிகர் சிலம்பரசன், நடிகர் சூர்யா போன்றவர்கள் காட்டும் ஓவர் ஆடிட்யூட் காரணமாக அவர்களது வளர்ச்சியை அவர்களே தடுத்துக்கொண்டு இருப்பதாக சினிமா விமர்சகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு வரலாற்று படத்தில் நடிக்க நடிகர் சிலம்பரசன் ஏற்கனவே கமிட் ஆகியிருந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த படத்தின் ப்ரீ புரடக்சன் பணிகளை ராஜ்கமல் பிலிம்ஸ் தரப்பில் செய்யப்பட்டு வந்தது. இந்த படம் சிம்புவின் சினிமா பயணத்தில் முக்கிய படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இப்போது அந்த படத்தை தயாரிக்கும் முடிவில் இருந்து ராஜ்கமல் பிலிம்ஸ் பின்வாங்கி விட்டது, நடிகர் சிம்புவும் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். ஏனெனில் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமம் விலை வெகுவாக குறைந்துவிட்ட நிலையில், சிம்புவை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க கமல்ஹாசன் தயாராக இல்லை. அதனால் இந்த படத்தை கை மாற்றிவிட்ட நிலையில் மும்பையை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்த படத்தை தயாரிக்கப் போவதாக தெரிய வந்துள்ளது. இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தை இந்த மும்பை பட நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





