- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமாருக்கு ரஜினி கொடுத்த சூப்பர் ஐடியா, வேற லெவலில் ஒர்க் அவுட் ஆன அந்த விஷயம்...

அஜீத்குமாருக்கு ரஜினி கொடுத்த சூப்பர் ஐடியா, வேற லெவலில் ஒர்க் அவுட் ஆன அந்த விஷயம் – தலைவரு கனகச்சிதமா கணிச்சு சொல்லியிருக்காரே?

- Advertisement -

ரஜினிகாந்த் இப்போதும் தமிழ் சினிமாவின் உச்சத்தின் சூப்பர் ஸ்டாராக இருக்க காரணம் அவரது திட்டமிடலும், அதற்கேற்ற செயல்பாடுகளும்தான். எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசரமாக செய்கிற கேரக்டர் அல்ல அவர். எந்த விஷயத்தை செய்தாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படும் புத்திசாலித்தனம் கொண்டவர்.

துவக்கத்தில் தன்னை ஒரு நடிகனாக தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திக்கொண்ட ரஜினி, அதன்பின் தன் சினிமா பாதையை அவரது விருப்பப்படி அமைத்துக்கொண்டார். என் படங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என ரசிகர்களின் நாடி பிடித்து பார்த்து, அதற்கேற்ப உருவாக்கப்பட்ட கதைகளில் நடித்து வெற்றி பெற்றவர்.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் பாணியை தான் இப்போதைய விஜய், அஜீத்குமார் போன்ற நடிகர்கள் கடைபிடிக்கின்றனர். ரசிகர்களின் மகிழ்ச்சிக்கான ஹீரோயிசம் சார்ந்த கமர்ஷியல் படங்களை தான் அவர்கள் தேர்வு செய்கிறார்களே தவிர ஆஸ்கார் விருதுக்கும், தேசிய விருதுக்கும் தேர்வாகும் கதைகளில், கதாபாத்திரங்களில் அவர்கள் நடிக்க முன்வருவதும் இல்லை. அப்படி ஒரு ஆர்வமும் அவர்களிடம் இல்லை.

இப்போது தனது 62வது படம் விடாமுயற்சியில் அஜீத்குமார் நடித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அஜீத்குமார் தொடர்ந்து தோல்வி படங்களாக தந்தார். பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட படங்கள் எதுவுமே சரியாக போகாததால் அஜீத்குமார் பலத்த ஏமாற்றத்தில் இருந்தார். பெரிய அளவில் ஹிட் கொடுத்த ஏதேனும் ரீமேக் படத்தில் நடிக்கலாம் என முடிவெடுத்தார்.

- Advertisement -

அப்போது அவருக்கு தோன்றிய படம்தான் பில்லா. அது ரஜினியின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம். அந்த கேரக்டரில் அஜீத்குமார் நடித்தால் நன்றாக இருக்கும் என ஏற்கனவே ஒருமுறை ரஜினி கூறியும் இருந்தார். இதுகுறித்து ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருக்கிறார் அஜீத்குமார்.

அப்போது அஜீத்குமாரிடம் பேசிய ரஜினி, நல்ல யோசனை. பில்லா படத்தை நீங்கள் ரீமேக் செய்து நடித்தால் மிக சிறப்பாக வரும். பில்லா கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பீர்கள். அந்த கதைக்களம், இப்போதைய சூழலிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் உங்கள் ஸ்டைலில் நீங்கள் நடியுங்கள் என ஐடியா கூறியிருக்கிறார். விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அந்த படம் 2007ம் ஆண்டில் வெளியாகி செம ஹிட் ஆனது. அப்போதே ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் குவித்து அஜீத்குமாருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்