தமிழ் சினிமாவில் நடிகர் சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அவரது தந்தை டி ராஜேந்தர் இயக்கத்தில் பல படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். பிறகு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சிம்பு இதுவரை 48 படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளையும் நிறைவு செய்திருக்கிறார்.
நடிகர் சிம்புவின் தம்பி குறளரசன் தங்கை இலக்கியா இருவருக்கும் திருமணமாகி குழந்தைகளும் பிறந்து விட்டன. மாமா பெரியப்பா என தனது தங்கை தம்பி பிள்ளைகள் அழைக்கும் நிலையில், இன்னும் நடிகர் சிம்பு திருமணம் செய்துக்கொள்ளாமல் 42 வயதில் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். இந்த ஆண்டில் அவரது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படமும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் பத்துதல படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அடுத்து கமலுடன் சிம்பு நடித்த தக்லைப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இதற்கிடையே கடந்த 3ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய சிம்பு தனது அடுத்த 3 படங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி சிம்புவின் 49வது படத்தை, பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்ட் செய்கிறார். 50வது படத்தை தேசிங்கு பெரியசாமி டைரக்ட் செய்கிறார். 51வது படத்தை அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்கிறார்.
இதில் சிம்பு தனது 50வது படத்தை அவரே சொந்தமாக தயாரிக்கிறார். இதற்காக அட்மின் சினி ஆர்ட்ஸ் என்ற சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தை சிம்புவே துவங்கியிருக்கிறார். அத்துடன் சிம்பு நடிக்கும் அவரது 49வது படத்தில் நடிகை சாய்பல்லவி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
பொதுவாக சினிமா நடிகர்கள் பெயரும் புகழும் சம்பாதிப்பதால் அவர்கள் தங்களது தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்கின்றனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு சாதாரண மனிதர்களை போல அவர்களால் சென்று வர முடியாது. இது அவர்களுக்கு பெரிய ஏக்கமாக, எதிர்பார்ப்பாகவே இருக்கும். இதுகுறித்து நடிகர் சிம்பு ஒரு நேர்காணலில் பேசும்போது, எனக்கு நைட்டில் ரோட்டில் நின்று டீக்குடிப்பது ரொம்பவும் பிடிக்கும். நிறைய டீக்கடையில் போய் வண்டியை நிறுத்திட்டு அப்படி நிறைய முறை டீ குடிச்சிருக்கேன் என்று சிம்பு கூறியிருக்கிறார்.





