- Advertisement -
Homeபொழுதுபோக்குடான் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ்டிஆர் 49 படத்தில் இருந்து விலகிய நடிகர் சிம்பு, அப்போ சந்தானம்...

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ்டிஆர் 49 படத்தில் இருந்து விலகிய நடிகர் சிம்பு, அப்போ சந்தானம் கமிட்மென்ட் அவ்ளோதானா? – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முதன்முறையாக நடிகர்கள் கமல்ஹாசன் சிம்பு இணைந்து நடித்த படம் தக்லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படம் வருகிற 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். திரிஷா அபிராமி ஜோஜூ ஜார்ஜ் அசோக் செல்வன் நாசர் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னட மொழி என கமல் பேசியதற்கு கண்டனமும் எதிர்ப்பு தெரிவித்து தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட அங்குள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அமைப்பு தடை விதித்துள்ளது. இதனால் தக்லைஃப் படத்தில் தயாரிப்பாளரான கமலுக்கு ரூ. 20 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

தக்லைஃப் படத்துக்கு பிறகு சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 49 படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க இருந்தார். சமீபத்தில் படத்தின் பூஜையும் நடந்தது. இந்த படத்தில் சிம்புவுடன் காமெடி ரோலில் படம் முழுக்க சந்தானம் நடிக்கவும் முடிவாகி அவர் கமிட் செய்யப்பட்டார்.

ஆனால் அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கிய டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவான நிலையில் எஸ்டிஆர் 49 படத்தை தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து சிம்பு விலகி விட்டார். அடுத்து மணிரத்னம் இயக்கும் காதல் படம் ஒன்றில் சிம்பு நடிக்கிறார். நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். இந்த படம்தான் இனி எஸ்டிஆர் 49 என்று கூறப்படுகிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. காமெடி நடிகர்களாக வலம் வந்த நடிகர்கள் ஹீரோக்கள் அவதாரம் எடுத்து விட்டதால், காமெடி நடிகர் இல்லையே என்று ரசிகர்கள் புலம்பும் நிலை உருவாகி உள்ளது. அதனால் எஸ்டிஆர் 49 படத்தில் காமெடி ரோலில் நடிக்க ஹீரோ சந்தானம் கமிட் ஆகியிருந்தார்.

மதகத ராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு சந்தானம் மீண்டும் காமெடிக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்ட நிலையில், சிம்புவின் நட்புக்காக சந்தானம் எஸ்டிஆர் 49 படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்தார். ஆனால் டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் அந்த படம் டிராப் ஆகி விட்டது. அதனால் மணிரத்னம் இயக்கும் காதல் படத்தில் சிம்புவுடன் சேர்ந்து சந்தானம் காமெடி ரோலில் நடிப்பாரா, இல்லையா என்ற ஏமாற்றத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்