- Advertisement -
நடிகர் சிவகார்த்திகேயன் சேயோன் படத்தில் நடித்து வரும் நிலையில் மற்றொரு படத்திலும் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்ட் செய்கிறார். இது ஆக்சன் படமாக உருவாகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு ஐபோன் 18 ப்ரோ பரிசாக சிவகார்த்திகேயன் வழங்கியிருக்கிறார். இதை ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்த பதிவில், சிவகார்த்திகேயன் அண்ணனிடம் இருந்து ஒரு அன்பான ஆச்சரியம் கிடைத்தது. இந்த பரிசுக்கு மிக்க நன்றி அண்ணா. இது எனக்கு மிகவும் அர்த்தமுள்ள ஒன்று என்று கூறியிருக்கிறார்.





