- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவை விட்டு வெளியே போனாலும் நான் பொழைச்சுக்குவேன், என்கிட்ட அந்த ரெண்டு இருக்குது - தைரியமாக...

சினிமாவை விட்டு வெளியே போனாலும் நான் பொழைச்சுக்குவேன், என்கிட்ட அந்த ரெண்டு இருக்குது – தைரியமாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் வெளியான அவரது மதராஸி படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது. இப்போது பராசக்தி என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அந்த படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகிறது.

இந்நிலையில் சென்னையில் தமிழக அரசு சார்பில் கல்வி விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவ மாணவியர் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

- Advertisement -

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார். அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் விழாவில் பேசியதாவது, திரைப்பட விழா என்றால் எதையாவது பேசிவிட்டு போய்விடலாம். ஆனால் கல்வி விழாவில் அப்படி பேச முடியாது. உலகில் எது எல்லாம் பெரிய செல்வம் என்று நினைக்கிறோமோ அதைவிட பெரிய செல்வம் கல்விதான்.

என் அப்பா ஒருவேளை சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் சென்றதால் நான் மூன்று வேளை சாப்பிட்டு பள்ளிக்குச் சென்றேன். என் அப்பா நடந்து பள்ளிக்குச் சென்றதால் நான் ஆட்டோ ரிக்சா பஸ் ரயில் என்ற வசதிகளுடன் பள்ளிக்கு சென்றேன். ஒரு தலைமுறை படித்தால் அடுத்த தலைமுறையின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதை என் குடும்பத்தில் அனுபவத்திலிருந்தே நான் கண்டு கொண்டுள்ளேன்.

- Advertisement -

என் அப்பாவுக்கு இருந்த சூழ்நிலை காரணமாக அவர் விரும்பிய படிப்பை படிக்க முடியவில்லை. கிடைத்த படிப்பை தான் படித்தார். அதனால் ஒரு டிகிரி பெற்றார். அவருடைய மகனான என்னை பிஇ, எம்பிஏ என்று இரண்டு டிகிரிகள் படிக்க வைத்தார். என்னுடைய அக்கா எம்பிபிஎஸ் எம்டி எஃப் ஆர் சி பி என மூன்று டிகிரிகள் முடித்தார்.

சினிமாத்துறை என்பது மிகவும் சவாலானது. சினிமாத்துறைக்குள் நுழைந்து வெற்றி பெறுவது என்பதே பெரிய அசாத்தியமானது. சினிமாவில் சவால்கள் வரும்போதெல்லாம் எனக்கு தைரியம் தருவது நான் படித்த இரண்டு டிகிரிகள் தான். சினிமாவை விட்டு போனாலும் இரண்டு டிகிரிகள் என்னிடம் இருக்கிறது. அதை வைத்து நான் பிழைத்துக் கொள்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் நன்றாக படித்தேன். ஆனால் சினிமா ஆர்வத்தால் இந்த துறைக்கு வந்தேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த விழாவில் பேசினார்.

- Advertisement -

சற்று முன்