- Advertisement -
Homeபொழுதுபோக்குசியானின் அடுத்த படத்தில் இணைந்த மிக முக்கியமான பிரபலம்... ரசிகர்களுக்கு காத்திருக்கிறது சித்தா இயக்குனரின் தரமான...

சியானின் அடுத்த படத்தில் இணைந்த மிக முக்கியமான பிரபலம்… ரசிகர்களுக்கு காத்திருக்கிறது சித்தா இயக்குனரின் தரமான சம்பவம்…

- Advertisement -

நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான கோப்ரா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதன் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். ஆதித்த கரிகாலனாக வந்த அவர், ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களின் கண்முன்னே மன்னராக வாழ்ந்தார். அவரது வசன உச்சரிப்பும், ஆக்ரோஷமான நடிப்பும் பார்வையாளர்களை கைத்தட்ட செய்தது.

அதிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில், அவர் நந்தினியாக நடித்திருந்த ஐஸ்வர்யா ராய் உடன் பேசிய காட்சிகள் பலரையும் சிலிர்க்க வைத்தன. அந்த அளவுக்கு அந்த காட்சிக்காக மெனக்கெட்டு நடித்திருப்பார் விக்ரம். இப்படியான சூழலில், அவரது நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

- Advertisement -

கிட்டத்தட்ட 2016 ஆம் ஆண்டே இதற்கான பணிகள் தொடங்கின. இதில் ஜான் எனும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்தார். கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்ரன், ரித்து வர்மா, ராதிகா, திவ்யதர்ஷினி, டான்ஸ் மாஸ்டர் சதீஷ், விநாயகம் என ஏராளமானோர் படத்தில் இடம்பெற்று இருந்தனர். படத்தின் டீசரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் பொருளாதார பிரச்சினை காரணமாக துருவ நட்சத்திரம் வெளிவர முடியாமல் முடங்கிப் போய் உள்ளது.

படத்தை எப்படியேனும் கொண்டுவர, கௌதம் மேனன் முயற்சித்து வருகிறார். ஆனால் அதற்கான உதவிகள் விக்ரம் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, தங்கலான் திரைப்படத்தை நம்பி இருக்கிறார் விக்ரம். பா ரஞ்சித் இயக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

ஆங்கிலேயர் காலத்தில் இருந்த சாதி அடக்கு முறையை தங்கலான் திரைப்படம் பேசுகிறது. இதில் விக்ரம் தோற்றமே வேறு லெவலில் இருப்பதால் ரசிகர்கள் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் குமார் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குடியரசு தினத்தை ஒட்டி இந்த திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கிராபிக்ஸ் பணிகள் நிறைவடையாததால் அந்த திரைப்படம் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப் போயிருக்கிறது.

இந்த நிலையில் அடுத்ததாக தனது 62 ஆவது படத்தில் இயக்குனர் அருண்குமார் உடன் இணைந்து இருக்கிறார் விக்ரம். பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அருண்குமார், சேதுபதி, சிந்துபாத் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படியான சூழலில் அவர் அடுத்ததாக விக்ரமுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த திரைப்படத்தின் முக்கியமான வேடத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத இந்த தகவலால் ரசிகர்கள் திக்கு முக்காடி போகின்றனர்.

- Advertisement -

சற்று முன்