தமிழ் சினிமாவில் வாலி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. அஜீத்குமார் இரட்டை வேடங்களில் இந்த படத்தில் நடித்திருந்தார். அதில் முதன்முறையாக ஒரு கேரக்டர் வில்லனாகவும் செய்திருந்தார். சிம்ரன் விவேக் ஜோதிகா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பிறகு விஜய் நடித்த குஷி படத்தையும் எஸ்ஜே சூர்யா இயக்கினார். இந்த படமும் மாஸ் ஹிட் படமானது.
தொடர்ந்து நியூ அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்த எஸ்ஜே சூர்யா, நடிகை நயன்தாரவுடன் கள்வனின் காதலி என்ற படத்திலும் ஜோடியாக நடித்திருந்தார். பிறகு இயக்குவதை விட்டுவிட்டு முழுநேர நடிகராக மாறிய எஸ்ஜே சூர்யா, இன்று தமிழ் சினிமாவில் பிரதான வில்லன் நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.
குறிப்பாக மாநாடு ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் ராயன் இந்தியன் 2 கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களில் எஸ்ஜே சூர்யா நடிப்பு வேற லெவலில் இருந்தது. தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் எஸ்ஜே சூர்யா, இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தனது இயக்கத்தில் ஒரு படம் பண்ணவும் முடிவு செய்திருக்கிறார். எனினும் நடிப்பில் மட்டுமே இப்போது முழு கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் எஸ்ஜே சூர்யா கூறியதாவது, இப்போது 40 நாட்கள் ப்ரீயாக இருக்கிறது. ஷூட்டிங் இல்லை. டக்குன்னு ஏதாவது ஒரு படத்தில் கமிட் ஆகி எதையாவது நடிச்சு அந்த 40 நாளிலும் பணம் சம்பாதிக்கலாம் என்று நான் நினைக்கவே மாட்டேன். அந்த 40 நாளும் சும்மா கூட இருந்துடுவேன். அந்த மாதிரி நடிக்க நான் விரும்பவே மாட்டேன்.
ஒரு பெரிய இயக்குனர் படத்தில் மத்த விஷயங்களுக்காக எனக்கு பிடிக்காத ஒரு கேரக்டரில் நான் நடித்தால், அந்த படம் ரிலீஸான பிறகு அதுவே நமக்கு பெரிய மைனஸ் ஆகி விடும். இந்த மாதிரி பெரிய படத்துலேயே நல்லா நடிக்கலையேங்கற விமர்சனம் கெட்ட பெயர் வந்துவிடும்.
படங்களை பொருத்தவரை 50 சதவீதம்தான் நம்ம நடிப்பு எடுபடும். மீதி 50 சதவீதம் அந்த படத்தின் கான்செப்ட். அது நல்லா இருந்தா தான் நம்ம நடிப்பு அங்கு பெரிய அளவில் கவனம் பெறும். அமிதாப் பச்சனே நடித்தாலும் கதை சரியில்லை என்றால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காது. ஆனா நல்ல படங்கள் என நாம் நினைத்து நடித்த படங்கள் ஓடாமல் போகலாம். அது தவறில்லை. அப்படி நடந்தால் அதை பாடமாக எடுத்துக்குவேன் என்று நடிகர் எஸ்ஜே சூர்யா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





