- Advertisement -
Homeபொழுதுபோக்குநிறைய படங்களில் வாய்ப்பு தேடி வந்தும் நான் ஹீரோவாக நடிக்காதது ஏன்? - நடிப்பு அரக்கன்...

நிறைய படங்களில் வாய்ப்பு தேடி வந்தும் நான் ஹீரோவாக நடிக்காதது ஏன்? – நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஜே சூர்யா இப்போது பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்து அசத்தி வருகிறார். நடிப்பு அரக்கன் என்றுதான் அவரை ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர். ஆரம்பத்தில் இயக்குனராக தமிழ் சினிமாவுக்குள் வந்த எஸ்ஜே சூர்யா வாலி மற்றும் குஷி ஆகிய படங்களை இயக்கினார். இந்த 2 படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக இருந்தன.

தொடர்ந்து நடிகராக மாறிய எஸ்ஜே சூர்யா நியூ அ ஆ கள்வனின் காதலி திருமகன் வியாபாரி என பல படங்களில் நாயகனாக நடித்தார். 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இறைவி படம் மூலம் 2வது சுற்றை ஆரம்பித்த எஸ்ஜே சூர்யா ஸ்பைடர் மெர்சல் ஸ்பைடர் மாநாடு மார்க் ஆண்டனி ராயன் இந்தியன் 2 கேம் சேஞ்சர் என பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வருகிறார்.

- Advertisement -

நடிகர் எஸ்ஜே சூர்யா ஹீரோ வில்லன் என எந்த கேரக்டரில் நடித்தாலும் அவரது நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வரவேற்கின்றனர். அவர் ஒரு இயக்குனர் என்பதால் எந்த மாதிரியான கேரக்டரை தந்தாலும் அதில் நடிப்பில் தனிமுத்திரை பதிக்கிறார். எனினும் வில்லன் கேரக்டர்களில் எஸ்ஜே சூர்யா அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. இதுகுறித்து எஸ்ஜே சூர்யாவே வெளிப்படையாக சமீபத்தில் பேசியிருக்கிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் எஸ்ஜே சூர்யா கூறியதாவது, இப்போதே 6 அல்லது 7 படங்களில் எனக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனா நான் இன்னும் அதை தொடவே இல்லை. ஏன்னா அது எனக்கு இன்னும் ஹைப் கொடுக்கலே. அந்த படங்கள் என் மனசுல ஒரு எதிர்பார்ப்பை தரலே.

- Advertisement -

ஒரு கதை கேட்கும்போது அது முதலில் என்னை சந்தோஷப்படுத்தணும். இறைவி படத்தை கேட்டப்போ அது என்னை சந்தோஷப்படுத்துச்சு. மாநாடு கேட்டப்போ என்னை சந்தோஷப்படுத்துச்சு. ஸ்பைடர் கேட்டப்போ என்னை சந்தோஷப்படுத்துச்சு. நெஞ்சம் மறப்பதில்லை கேட்டப்போ என்னை சந்தோஷப்படுத்துச்சு.

அதனால் நமக்கு சந்தோஷம் கொடுக்கிற சப்ஜெக்ட்டில் மட்டும் கை வைப்போம். இல்லாததை தொட வேண்டாம். அப்படீங்கற முடிவுலதான் ஹீரோவாக நான் படம் பண்ணலே. வில்லனோ ஹீரோவோ அது கணக்கில்லே என்று சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்