- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் தம்பிகளாக, ரசிகர்களாக இருக்க உங்களுக்கு தகுதியில்லே, ரொம்பவும் வேதனையாக இருக்கு - மாமன் படம்...

என் தம்பிகளாக, ரசிகர்களாக இருக்க உங்களுக்கு தகுதியில்லே, ரொம்பவும் வேதனையாக இருக்கு – மாமன் படம் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி!

- Advertisement -

நடிகர் சூரி ஐஸ்வர்யா லட்சுமி ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்த மாமன் படம் நேற்று வெளியானது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனம் கிடைத்து வருகிறது. இதற்கிடையே இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மதுரையில் நடிகர் சூரியின் ரசிகர்கள் சிலர் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செய்தனர். இது இணையத்தில் வைரலானது.

மாமன் படம் ஓடும் ஒரு தியேட்டருக்கு வந்திருந்த நடிகர் சூரி கூறியதாவது, மாமன் படத்தை பார்த்தவர்கள் பாராட்டி வரும் இந்த நேரத்தில் எனக்கு கொஞ்சம் வருத்தமும் இருக்கு. நான் பட்ட கஷ்டத்துக்கு இன்னைக்கு மாமன் படம் மூலமாக பெரிய வரவேற்பு கிடைச்சதுன்னு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன். இதுல வருத்தமான விஷயம் என்னன்னா, மதுரையில் மாமன் படம் வெற்றி அடைய வேண்டும் என்று சில அன்பு தம்பிகள் மண்சோறு சாப்பிட்டிருக்காங்க.

அவர்களை அன்பு தம்பிகள் என்று சொல்லவே எனக்கு வருத்தமாக இருக்கு. தம்பிகளா, இது ரொம்ப முட்டாள்தானமானது. என்னை இம்ப்ரஸ் பண்ணனும், எங்கயோ இருந்துட்டு என் கவனத்துக்கு வரணுமுன்னு நீங்க ஒரு விஷயத்தை பண்றீங்க. கதை நல்லா இருந்தா, படம் நல்லா எடுத்தா நல்லா அது ஓடப்போகுது. மண் சோறு சாப்பிட்டா படம் நல்லா ஓடிடுமா?

இது ரொம்ப வேதனையா இருக்கு. அந்த காசுக்கு தண்ணீ, மோர், சாப்பாடு இப்படி எதுனா வாங்கிக்கொடுத்து நாலு பேருக்கு நீங்க உதவியிருக்கலாம். இது என்ன செயல் இது? இதனால் என் தம்பிகளாக ரசிகர்களாக கூட இருக்க நீங்க தகுதியில்லே. இது ஒரு முட்டாள்தனம்.

நான் உணவை ரொம்ப மதிக்கிறவன். நான் சாப்பாட்டுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டவன் என்பது எனக்குதான் தெரியும். ஆனால் அந்த சாப்பாட்டுக்கு நீங்க மரியாதை கொடுக்கவே இல்லை. அந்த சாப்பாட்டை நீங்க மதிக்கவே இல்லை. எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு.

காலையில் இருந்த மாமன் படம் நல்லா போகுதுன்னு கேட்டு கேட்டு சந்தோஷமாக இருந்த என்னை இப்படி ஒரு மிக தவறான செயலை செய்து என்னை நீங்க ரொம்பவும் கஷ்டப்படுத்திட்டீங்க. தயவு செய்து இதுபோன்ற தவறை இனிமேல் செய்யவே செய்யாதீங்க. கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். படம் நல்லா இருந்தா ஓடும். இந்த முட்டாள்தனத்தை இனிமேல் யாரும் பண்ணாதீங்க என்று நடிகர் சூரி கூறியிருக்கிறார்.

சற்று முன்