- Advertisement -
Homeபொழுதுபோக்குபழசை மறக்கறவன் நான் இல்லீங்க, அப்படி ஒரு பேரை நான் வெச்சிருக்கேன் - பரோட்டா சூரி...

பழசை மறக்கறவன் நான் இல்லீங்க, அப்படி ஒரு பேரை நான் வெச்சிருக்கேன் – பரோட்டா சூரி சர்ச்சைக்கு பதிலளித்த மண்டாடி பட ஹீரோ சூரி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் சூரி காமெடி நடிகராக இருந்து பிறகு ஹீரோவாக மாறியவர். தீபாவளி சங்கமம் காதல் கண்ணன் வருவான் போன்ற சில படங்களில் நடிகர் சூரி சில காட்சிகளில் காணப்பட்டாலும் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் தான் அவருக்கு ரசிகர்களிடம் நல்ல அடையாளம் கிடைத்தது.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் ஹீரோவாக அறிமுகமான இந்த படத்தில் கபடி விளையாடும் குழுவில் ஒருவராக சூரி இருப்பார். மதுரைக்கு கபடி விளையாட செல்லும் அவர்கள், ஒரு ஓட்டலில் பரோட்டா சாப்பிடும் சூழல் ஏற்படும்.

அப்போது 50 பரோட்டா சாப்பிடும் போட்டியில் சூரி காமெடியாக நடித்தது பெரிய அளவில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. அதன்பிறகு தான் பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் சூரி காமெடி ரோலில் நடித்து புகழ்பெற்றார். பல படங்களில் பரோட்டா சூரி என்றுதான் டைட்டில் கார்டு கூட போடப்பட்டது.

ஆனால் மாமன் படத்தை தொடர்ந்து மண்டாடி படம் நடிகர் சூரிக்கு பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. மண்டாடி படம் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளது. இந்த சூழலில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சூரி, பரோட்டா சூரி என்று ஒருவர் கிடையாது. நான் நடிகர் சூரிதான் என்று பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பழசை மறந்துட்டீங்களா சூரி என்று சமூக வலைதளங்களில் பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சூரி கூறியதாவது, வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிட்ட காட்சியில் நடித்துதான் நான் ரசிகர்களிடம் பிரபலமானேன் என்பது உண்மைதான். அதை நான் மறுக்கவில்லை. பழசை எல்லாம் நான் மறக்கவும் இல்லை. அந்த படத்தில் நடித்ததற்காக அடையாளமாக தான் என் பெண்ணுக்கு வெண்ணிலா என்று பெயர் வைத்தேன்.

பரோட்டா காமெடி காட்சியில் நடித்த பிறகு, பரோட்டா சூரி என்று எந்த படத்திலும் டைட்டில் கார்டில் போடவில்லை. என்னிடம் ஒரு இயக்குனர் கேட்ட போது அப்படி போட வேண்டாம் என்று சொல்லி விட்டேன். ஆனால் எனக்கு தெரியாமல் சில படங்களில் அப்படி போட்டார்களா, என்று எனக்கு தெரியாது. பரோட்டா சூரியாக என்னை பாராட்டியதும் ரசிகர்கள்தான். இன்று ஹீரோவாக கதை நாயகனாக என்னை வைத்திருப்பதும் ரசிகர்கள்தான் என்று அந்த நேர்காணலில் நடிகர் சூரி கூறியிருக்கிறார்.

சற்று முன்