- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு தரமான சம்பவம் நடந்திருக்கிறதா? -...

நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு தரமான சம்பவம் நடந்திருக்கிறதா? – வியந்து போன ரசிகர்கள்!

- Advertisement -

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ரஜினிகாந்த், பஸ் கண்டக்டராக ஆரம்பத்தில் இருந்தவர். பிறகு தனது உயிர் நண்பன் ராவ் பகதூர் ஆலோசனைப்படி சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தார். இயக்குனர் கே பாலசந்தர் இயக்கத்தில் 1975ம் ஆண்டில் ரஜினி அறிமுகமான அபூர்வ ராகவங்கள் படம் வெளியானது.

இந்த 2025ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி இப்போது 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இதுவரை 170 படங்களில் நடித்திருக்கிறார். தசெ ஞானவேல் இயக்கத்தில் கடந்தாண்டில் வெளியான வேட்டையன் படம் அவரது 170வது படமாகும். 265 கோடி ரூபாய் இந்த படம் வசூலித்தது.

- Advertisement -

இப்போது நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் கூலி அவரது 171வது படமாகும். அடுத்து நெல்சன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள ஜெயிலர் 2 படம் அவரது 172வது படமாகும். இந்த படம் அடுத்த ஆண்டில்தான் ரிலீஸாக வாய்ப்புள்ளது. இந்த படத்தை உருவாக்க நெல்சன் 13 மாதங்கள் ஆகும் என்று ஏற்கனவே கூறியிருக்கிறார்.

இதற்கிடையே முக்கிய தகவலாக நடிகர் ரஜினிகாந்த் 1975 முதல் 2000ம் ஆண்டு வரை 25 ஆண்டுகள் ஒரு பாகமாகவும், 2001ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை 25 ஆண்டுகள் ஒரு பாகமாகவும் பிரித்து அவரது சினிமா வாழ்க்கையை பார்த்தால், முதல் 25 ஆண்டுகளில் அவர் 154 படங்களிலும், 2வது 25 ஆண்டுகளில் வெறும் 16 படங்களில் மட்டுமே நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

அதன்படி 2001ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை ரஜினி நடித்த படங்களின் எண்ணிக்கை வெறும் 16 தான் என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை தந்துள்ளது. அதே நேரத்தில் அதற்கு முந்தைய 25 ஆண்டுகளில் 154 படங்களில் ரஜினி நடித்திருப்பதும் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

1999ம் ஆண்டில் வெளியான படையப்பாவுக்கு பிறகு, 2001 முதல் சந்திரமுகி சிவாஜி குசேலன் எந்திரன் லிங்கா கோச்சடையான் கபாலி சினிமா வீரன் காலா 2.0 பேட்ட தர்பார் அண்ணாத்த ஜெயிலர் லால் சலாம் வேட்டையன் ஆகிய 16 படங்கள் மட்டுமே 25 ஆண்டுகளில் ரஜினி நடிப்பில் வெளியாகி உள்ளது. ஆனால் இப்பவும் உச்ச நடிகராக சூப்பர் ஸ்டராக ஜொலிக்கிறார் ரஜினிகாந்த் என்பது ரசிகர்களை வியக்க வைக்கிறது.

- Advertisement -

சற்று முன்