நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். சரத்குமார் நடித்த ஐயா படம் மூலம் அறிமுகமான நயன்தாரா, சமீபத்தில் தனது 75வது படமான அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தி படம் ஒன்றிலும் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.
துவக்கத்தில் சிலம்பரசனுடன் நயன்தாரா, காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது. இருவரும் உதடு கடிக்கும் முத்தக்காட்சி புகைப்படங்கள், பத்திரிகைகளில் வெளியாகி ஒரு கட்டத்தில் வைரலானது. அதன்பிறகு சிம்பு, நயன்தாரா பிரிந்து விட்டனர். அதன்பிறகு நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருந்த நயன்தாரா, ஒரு கட்டத்தில் அவரையும் பிரேக்கப் செய்துவிட்டார்.
இந்நிலையில், நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் 7 ஆண்டுகள் காதலித்த நிலையில், கடந்த ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டனர். பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்த இரட்டை ஆண் பிள்ளைகளுக்கு இருவரும் பெற்றோர் ஆகினர்.
நடிகை நயன்தாரா, பெரிய ஸ்டார் நடிகையாக இருந்தாலும் ஒரு தாயாக, தாய்மை உணர்வுடன் தன் குழந்தைகள் மீது அபரிதமிதமான அன்பை காட்டி வருகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு குழந்தைகளுடன் வருகிறார். குழந்தைகளை கவனிக்க 3 ஸ்பெஷல் நர்ஸ்களை உடன் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு ஹைஜீனிக் வசதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில்தான் நயன்தாரா, குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் வசிக்கும் அடுக்கு மாடி அபார்ட்மெண்டில் இருந்து அவ்வப்போது, குழந்தைகளை தரை தளத்துக்கு அழைத்து வந்து காலை, மாலை நேரங்களில் விளையாட விட்டு கவனித்துக் கொள்கிறார்.
அப்படி விளையாடும் போது, அந்த பகுதியில் ஆட்டோ சற்று வேகமாக வந்தாலோ, அல்லது புட் டெலிவரி பாய் வரும்போது சத்தமாக போன் செய்து பேசினாலோ, உடனே அவர்களிடம் நயன்தாரா சண்டைக்கு போய் விடுகிறார். குழந்தைகளை தொந்தரவு செய்யும் வகையில் அவர்கள் நடந்துக்கொண்டதாக கண்டிக்கிறார். இப்படி தனது குழந்தைகளுக்காக அவர் அங்கு சண்டையிட்ட வகையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் குடியிருப்போர் நலச்சங்கத்தில் இதுவரை நயன்தாரா மீது 18 புகார்கள் பதிவாக உள்ளதாக கூறப்படுகிறது.





