- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடித்த நண்பன் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது விஜய் டிவியின் மொக்கை ஜோக் நாயகனா?...

விஜய் நடித்த நண்பன் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது விஜய் டிவியின் மொக்கை ஜோக் நாயகனா? யார்ன்னு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க!

- Advertisement -

ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ், சத்யன் உட்பட பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் “நண்பன்”. இத்திரைப்படம் ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

முதலில் இத்திரைப்படத்தில் விஜய்க்கு பதில் சூர்யாதான் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் சூர்யா நடிக்க முடியாமல் போக, இத்திரைப்படத்தில் விஜய் நடித்தார். இத்திரைப்படம் வெளிவந்த சமயத்தில் விஜய் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக இருந்தது.

- Advertisement -

அதுவரை விஜய், ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்து வந்த நிலையில், ஒரு எமோஷனல் நிறைந்த கலகலப்பான திரைப்படமாக ‘நண்பன்” திரைப்படம் உருவானது. இத்திரைப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

“நண்பன்” திரைப்படத்தில் மிகவும் ஸ்ட்ரிக்ட்டான பிரின்சிபள் கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். அதே போல் பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்யும் ஒரு நகைச்சுவை கதாப்பாத்திரமான சைலன்சர் என்ற ஸ்ரீவட்சன் கதாப்பாத்திரத்தில் சத்யன் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது “நண்பன்” திரைப்படத்தை குறித்து இதுவரை யாரும் அறியாத ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதாவது விஜய் தொலைக்காட்சி மூலம் மிக பிரபலமாக அறியப்பட்ட மதுரை முத்துதான் முதலில் ஸ்ரீவட்சன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம்.

ஆனால் அவர் ஒரு கட்டத்தில் நடிக்க முடியாமல் போக அதன் பிறகுதான் அக்கதாப்பாத்திரத்தில் சத்யன் நடித்தாராம். ஆனால் இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.

மதுரை முத்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மத்தியில் மிக பிரபலமான ஸ்டான்ட் அப் காமெடியனாக வலம் வந்தார். அதனை தொடர்ந்து பல காமெடி நிகழ்ச்சிகளில் தற்போது பங்குபெற்று வருகிறார்.

- Advertisement -

சற்று முன்