- Advertisement -
Homeபொழுதுபோக்குதேங்காய் பன்னு சாப்பிட நான் அலைந்த ஊர் இதுதான் - இப்போது எனக்கு சிவப்பு கம்பள...

தேங்காய் பன்னு சாப்பிட நான் அலைந்த ஊர் இதுதான் – இப்போது எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தந்தது – நெகிழ்ச்சியாக பேசிய நடிகர் சூரி!

- Advertisement -

நடிகர் சூரி நடிப்பில் மாமன் என்ற படம் வருகிற 16ம் தேதி ரிலீஸாக உள்ளது. விலங்கு என்ற பிரபலமான வெப் சீரியலை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் கதை ஆசிரியர் நடிகர் சூரிதான். அவர் சொன்ன கதையை தான் பிரசாந்த் பாண்டியராஜன் டைரக்ட் செய்திருக்கிறார்.

தாய் மாமன் உறவை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சூரி நாயகனாகவும் ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ராஜ்கிரண் சுவாசிகா பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள 4வது படமாக இது வெளியாகிறது.

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் சூரி முதல் பாகத்தில் நாயகனாக இருந்தார். ஆனால் 2வது பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்குதான் அதிக முக்கியத்துவம் இருந்தது. அடுத்த துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் சூரி நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ஆனால் கூழாங்கல் பட இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்த கொட்டுக்காளி படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். இதையடுத்து நாயகனாக சூரி நடிக்கும் 4வது படம்தான் மாமன் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூரி சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு பல படங்களில் பல பணிகளை செய்திருக்கிறார். பிளம்பர் எலக்ட்ரீசியன் பெயிண்டர் ரிசப்னிஸ்ட் என பல வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். குறிப்பாக சென்னைக்கு வருவதற்கு முன்பு முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான திருப்பூரில் 7 ஆண்டுகளுக்கு மேல் இருந்து அங்கு வேலை செய்திருக்கிறார்.

திருப்பூரில் நேற்று மாமன் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. சக்தி சினிமாஸ் தியேட்டரிலும் பிறகு தனியார் கல்லூரியிலும் நடந்த இந்நிகழ்ச்சியில் நடிகர் சூரி கலந்துக்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் 8ம் வகுப்பு படிக்கும் போதே எல்லாத்தையும் விட்டுட்டு திருப்பூருக்கு வேலைக்கு வந்துட்டேன். அப்போ ஒரு நாளைக்கு எனக்கு 20 ரூபாய் சம்பளம். 7 நாளைக்கு 140 ரூபாய் வரும். அதில் 70 ரூபாய் செலவு பண்ணிட்டு மீதி 70 ரூபாயை ஊருக்கு அனுப்பிடுவேன் அப்போ திருப்பூரில் ஒரு தேங்காய் பன்னு சாப்பிட அலைவேன். இன்று அதே திருப்பூரில் சிவப்பு கம்பள வரவேற்பு எனக்கு அளித்தது பெருமையாக உள்ளது என்று நெகிழ்ச்சியாக நடிகர் சூரி திருப்பூரில் பேசியிருக்கிறார்.

சற்று முன்