- Advertisement -
சென்னையில் நேற்று நடந்த செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசை இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக நடிகர் ரஜினிகாந்தின் பிஆர்ஓ ரியாஸ், ஒரு பதிவை செய்திருக்கிறார். அதில் கல்ட் கிளாசிக் படங்களை ரீமேக் செய்து கெடுக்கக்கூடாது. தயாரிப்பாளர்கள் அந்த ஒரிஜினல் படங்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





