நடிகர் சூரி காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் பிரபலமானவர். அவரை விடுதலை படம் மூலம் இயக்குனர் வெற்றிமாறன் கதாநாயகனாக மாற்றினார். அந்த படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது. ஆனால் விடுதலை 2 படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரிக்கு கொடுத்த முக்கியத்துவம் 2ம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மாறிவிட்டது.
எனினும் இப்போது நடிகர் சூரி தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை விடுதலை 2 படங்களுக்கு பிறகு துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி நடித்த கருடன் படம் மிகப்பெரிய வரவேற்பை, வெற்றியை பெற்றது. இந்த படத்தில் சசிக்குமார் உன்னிமுகுந்தன் ஷிவதா நாயர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.
கருடன் படத்துக்கு பிறகு கூழாங்கல் பட இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்த படம் கொட்டுக்காளி. இந்த படம் திரைப்பட விழாக்களில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தியேட்டர்களில் வெளியாகி போதிய வரவேற்பை பெறவில்லை. படம் பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கொட்டுக்காளி படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான எஸ்கே புரடக்சன்ஸ் தயாரித்து இருந்தது. ஆனால் விமர்சன ரீதியாக வியாபார ரீதியாக கொட்டுக்காளி படம் பலத்த ஏமாற்றத்தையே தந்தது. எனினும் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பது என்பதில் சூரி முடிவாக இருக்கிறார்.
இப்போது நடிகர் சூரி மாமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக கட்டா குஸ்தி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். நடிகர் சூரிக்கு சகோதரியாக லப்பர் பந்து படத்தில் நடித்த நடிகை சுவாசிகா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் உள்ளது. போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகளை அடுத்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் நடிகர் சூரி, தனது தந்தையின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் நடிக்க உள்ளார். மறைந்த தனது தந்தைக்கு செய்யும் தனது காணிக்கை என்று ஏற்கனவே அவர் கூறியிருந்தார். தனது தந்தை கேரக்டரில், வயதானவராக நாட்டுப்புறக் கலைஞராக இந்த வெப் சீரிஸில் சூரி நடித்து, பர்ஸ்ட் காபி முறையில் இந்த வெப் சீரிஸ் தயாராகிறது. மதயானைக் கூட்டம் டைரக்டர் விக்ரம் சுகுமார் இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். நாயகியாக நடிக்க கயல் ஆனந்தியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.





