- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென அந்த முடிவுக்கு வந்த நடிகர் சூரி… உங்க நண்பரை பார்த்தாவது திருந்துங்க என்று அட்வைஸ்...

திடீரென அந்த முடிவுக்கு வந்த நடிகர் சூரி… உங்க நண்பரை பார்த்தாவது திருந்துங்க என்று அட்வைஸ் செய்யும் ரசிகர்கள் – இது தேவைதானா பாஸ்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகர் சூரி. பல முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக இருந்த நடிகர் சூரியை, இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தார். அந்த படத்தில் சூரி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார்.

விடுதலை படத்துக்கு பின் மெடி நடிப்பில் இருந்து முற்றிலுமாக விலகி ஹீரோவாக மட்டுமே இனி நடிக்க வேண்டும் என்று நடிகர் சூரி முடிவு செய்தார். விடுதலை படத்தைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் சூரி நடித்தார். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற படத்தில் சூரி நடித்தார். இந்த படம் கமர்சியலாக வெற்றி பெறவில்லை.

- Advertisement -

அடுத்து சூரி நடிப்பில் வெளியான மாமன் படம் மிகப்பெரிய வரவேற்பையும் ரசிகர்களின் பேராதரவையும் பெற்றது. குடும்ப கதை பின்னணியில் உருவான இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். சூரியின் அக்காவாக லப்பர் பந்து நடிகை சுவாசிகா நடித்திருந்தார். இந்த படத்தின் கதையை எழுதியதும் நடிகர் சூரி என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு ஏற்ற நல்ல கதைகளை தேர்வு செய்து நடிகர் சூரி நடித்து வருகிறார். அடுத்ததாக மண்டாடி என்ற படத்தில் நடிகர் சூரி நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் மஹிமா நம்பியார் நாயகியாகவும் முக்கிய கேரக்டரில் சத்யராஜூம் நடிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் நடிகர் சூரி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க முடிவு செய்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இனிமேல் சூரி நடிக்கும் படங்களை அவரே தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சூரியை வைத்து படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்கள் சூரியின் சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள். முதலில் நாயகனாக நடிக்க ரூ.8 கோடி வரை சம்பளம் வாங்கிய நடிகர் சூரி இப்போது தனது சம்பளத்தை 15 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல தயாரிப்பாளர்கள் சூரி படங்களை தயாரிக்க முன்வராததால் சூரியே சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தனது படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

தனது நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி 100 கோடி ரூபாய் வரை கடனாளியாக மாறினார். பல படங்களில் சம்பளமின்றி நடித்துதான் அந்த கடன்களை அடைத்தார். இன்னும் அவருக்கு கடன் பிரச்னை தீரவில்லை. கருடன் மாமன் என 2 ஹிட் படங்களை மட்டுமே கொடுத்த நடிகர் சூரி சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தியதுடன், தொடர்ந்து தயாரிப்பு நிறுவனமும் தொடங்கி இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்