- Advertisement -
Homeபொழுதுபோக்கு9 ஆண்டுகளுக்கு பின் ஹீரோ ஆன சூரி … நடிகர் சந்தானத்தை இப்படி பின்னுக்கு...

9 ஆண்டுகளுக்கு பின் ஹீரோ ஆன சூரி … நடிகர் சந்தானத்தை இப்படி பின்னுக்கு தள்ளி முந்தி விட்டாரே? – ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் சந்தானம் விஜய் டிவியில் லொள்ளு சபா காமெடி ஷோவில் நடித்துக் கொண்டிருந்தார். சூப்பர் ஹிட் படங்களை கலாய்த்து அந்த நடிகர்களின் கெட்டப்பில் நடித்து காமெடி செய்துக்கொண்டிருந்த நடிகர் சந்தானத்தை தனது மன்மதன் வல்லவன் மற்றும் ஒஸ்தி போன்ற படங்களில் நடிக்க வைத்தார் நடிகர் சிலம்பரசன். சந்தானம் பேசிய காமெடி பஞ்ச் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து காமெடி செய்த நடிகர் சந்தானம், ஒரு கட்டத்தில் கதாநாயகனாக மாறினார். கடந்த 2014ம் ஆண்டில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஹீரோவாக தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.

- Advertisement -

சபாபதி பாரிஸ் ஜெயராஜ் டிக்கிலோனா ஏ ஒன் குலுகுலு டகால்டி தில்லுக்கு துட்டு டிடி ரிடர்ன்ஸ் வடக்குப்பட்டி ராமசாமி போன்ற பல படங்களில் சந்தானம் நாயகனாக நடித்தார். இதில் பல படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெற்றன. இந்த சூழலில் இப்போது நடிகர் ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடித்த டிடி ரிடர்ன்ஸ் நெக்ஸ் லெவல் என்ற படம் கடந்த 16ம் தேதி வெளியானது.

கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்ற டிடி ரிடர்ன்ஸ் படத்தின் 2ம் பாகமாக தான் இந்த டிடி ரிடர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படத்தின் சுவாரசியம் இல்லை. ரசிகர்களை இந்த படம் பெரிய அளவில் உற்சாகப்படுத்தவில்லை. நேற்று 22ம் தேதி வரை 7 நாட்களில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ. 12.5 கோடி மட்டும்தான்.

- Advertisement -

ஆனால் அதே 16ம் தேதி நடிகர் சூரி நடிப்பில் வெளியான மாமன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்து வருகிறது. தாய் மாமன் உறவை பற்றிய கதைக்களத்தில் உருவான இந்த படத்தை பேமிலி ஆடியன்ஸ் விரும்பி ரசித்து பார்த்து வருகின்றனர். தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

கடந்த 7 நாட்களில் மாமன் படத்தின் வசூல் மொத்தம் ரூ. 22 கோடியை கடந்துள்ளது. அதாவது 9.5 கோடி ரூபாய் சந்தானம் படத்தை விட சூரி படம் அதிகமாக வசூலித்துள்ளது. 2014ம் ஆண்டில் சந்தானம் ஹீரோ ஆனார். ஆனால் 9 ஆண்டுகள் கழித்து 2023ம் ஆண்டில் விடுதலை படம் மூலம் ஹீரோ ஆன சூரி, சந்தானத்தை பின்னுக்கு தள்ளி மாமன் படம் வசூலில் ஜெயித்து காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்