- Advertisement -
Homeபொழுதுபோக்குசிறந்த நடிகர் விருது அறிவித்த கர்நாடகா அரசு; எனக்கு விருது வேண்டாம் என மறுத்த...

சிறந்த நடிகர் விருது அறிவித்த கர்நாடகா அரசு; எனக்கு விருது வேண்டாம் என மறுத்த நடிகர் சுதீப் – நீங்க சொல்ற காரணம் புதுசா இருக்கே ப்ரோ?

- Advertisement -

கன்னட மொழியில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சுதீப். கிச்சா சுதீப் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். கன்னட மொழி படங்களில் ஹீரோவாக நடித்து பல வெற்றி படங்களை தந்திருக்கிறார். ஞானியுடன் சுதீப் நடித்த நான் ஈ படம் பெரிய வெற்றியை பெற்றது. இதை இயக்குனர் ராஜமவுலி இயக்கி இருந்தார். பாகுபலி படத்தில் மன்னராக சுதீப் நடித்திருந்தார்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த புலி படத்தில் வில்லனாக சுதீப் நடித்து, தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் சுதீப் நடித்த மேக்ஸ் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சுதீப் கேரக்டரில் தமிழ் நடிகர் விதார்த் நடிப்பதாக இருந்து, பிறகு தயாரிப்பாளர் எஸ் தாணு, சுதீப்பை அந்த கேரக்டரில் நடிக்குமாறு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கர்நாடக அரசு கடந்த 2019ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகளை அறிவித்தது. இதில் பயில்வான் என்ற படத்தில் சிறப்பாக நடித்த நடிகர் சுதீப்புக்கு சிறந்த நடிகர் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த விருதை நிராகரிப்பதாக நடிகர் சுதீப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, சிறந்த நடிகராக என்னைத் தேர்ந்தெடுத்த தேர்வுக் குழுவினருக்கு எனது நன்றி. இது எனக்கு கிடைத்த கௌரவமாக கருதுகிறேன். இந்த விருது எனது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று பெருமிதப்படுகிறேன்.

- Advertisement -

அதே நேரத்தில் எனது முடிவு உங்களுக்கு ஏமாற்றத்திற்கு அளிக்கும். அதாவது நான் கடந்த சில ஆண்டுகளாக விருதுகள் பெறுவதை நிறுத்திவிட்டேன். அதை தொடர்ந்து பின்பற்றியும் வருகிறேன். கலைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட நிறைய பேர் பணி செய்து வருகிறார்கள்.

அவர்களில் ஒருவரை தேர்வு செய்து இந்த விருதை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் எனது முடிவை மதிப்பீர்கள் என்று கருதுகிறேன். நான் எடுத்த முடிவில் பயணிக்க நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அந்த பதிவில் நடிகர் சுதீப் கூறியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

- Advertisement -

சற்று முன்