- Advertisement -
Homeபொழுதுபோக்குமுழு அரசியல்வாதியாக மாறிய நடிகர் விஜய், நீட் குறித்த விஜயின் கருத்துகளுக்கு அரசியல் வட்டாரத்தில் குவியும்...

முழு அரசியல்வாதியாக மாறிய நடிகர் விஜய், நீட் குறித்த விஜயின் கருத்துகளுக்கு அரசியல் வட்டாரத்தில் குவியும் பாராட்டுகள் – பாஜக அரசை ஒன்றிய அரசு என்றும் சொல்லி விட்டாரே?

- Advertisement -

கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு நடிகர் விஜய் ரொக்கப் பரிசு மற்றும் கல்வி விருதுகளை வழங்கி கவுரவித்தார். கடந்த 28ம் தேதி முதல் கட்டமாகவும், இன்று இரண்டாவது கட்டமாகவும் இந்த விழா சென்னை, திருவான்மியூரில் நடந்தது. இன்று நடக்கும் விழாவில், நான் அட்வைஸ் பண்ண மாட்டேன், நேரடியாக விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு போய்விடலாம் என, முதல் நாள் நிகழ்ச்சியின் முடிவில் கூறிவிட்டுச் சென்றார்.

ஆனால் இன்று துவக்க நிகழ்ச்சியில் மைக்கை பிடித்த விஜய், நான் இன்றைய நிகழ்ச்சியில் எதுவும் பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் முக்கியமான இந்த விஷயத்தை இப்போது பேசாமல் விட்டால் அது நன்றாக இருக்காது, சரியாக வராது என்பதால் பேசி விடுகிறேன், என்று கூறிவிட்டு நீட் தேர்வு குறித்த பல விஷயங்களை புட்டுபுட்டு வைத்தார்.

மிகவும் கவனமாக, பொறுமையாக, வார்த்தைகளை தேர்ந்தெடுத்து விஜய் மிக தெளிவாக அவர் சொல்ல வேண்டிய விஷயங்களை ஆணித்தரமாகவும், மிக அழுத்தமாகவும் கூறினார். நீட் தேர்வினால் பாதிக்கப்படும் கிராமப்புற மாணவ, மாணவியர், நீட் தேர்வில் உள்ள குளறுபடிகள், நீட் தேர்வில் நடந்த முறைகேடு, நீட் தேர்வுக்கு நிரந்தர தீர்வு காண என்ன செய்யலாம் என பல விஷயங்களை அவர் எடுத்துக் கூறினார்.

எந்தவிதமான குறிப்பும் வைத்துக் கொள்ளாமல், இந்திய அளவிலான ஒரு சர்ச்சையான விஷயத்தை, அவர் லாவகமாக கையாண்டு பேசிய விதத்தை பார்த்து, தமிழக அரசியல்வாதிகள் பலரும் அசந்து போய்விட்டனர். முதல் பேச்சு, கன்னிப் பேச்சு என்பார்கள். ஒரு அரசியல் சார்ந்த, மக்கள் பிரச்னையை எடுத்துப் பேசிய விஜய்க்கு பொதுமக்கள் தரப்பிலும், அரசியல் கட்சிகள் தரப்பிலும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

பேச்சில் எந்தவிதமான ஆவேசமும் காட்டாமல், பொறுப்புடன் நிதானமாக அவர் கருத்துகளை பக்குவமாக எடுத்துச் சொன்ன விதம், நீட் விலக்கு மற்றும் அதற்கான தீர்வு குறித்து அவர் பேசியதற்கு, எதிர் கருத்துகளை பேசுபவர்கள் கூட இந்த விஷயங்கள் சற்று யோசிக்க வைத்திருக்க கூடும் என்பதில் சந்தேகமில்லை. அதுவும் மாணவர்களின் எதிர்காலமான நீட் தேர்வு குறித்து அவர் பேசியது நல்ல அபிமானத்தை அவருக்கு பெற்றுத் தந்திருக்கிறது.

நீட் ரத்து கோரிய தமிழக அரசின் தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாக கூறியதால், ஆளுங்கட்சியான திமுகவுக்கு பெரிய ஆச்சரியமும், இன்ப அதிர்ச்சியும் கிடைத்துவிட்டது. ஏனெனில், 2026ம் ஆண்டில் விஜய் எதிர்க்கப் போவதே ஆளுங்கட்சியான திமுக வைதான். அதே நேரத்தில் பாஜக தலைமையிலான பாஜக அரசை, தனது பேச்சின் இடையே சில இடங்களில் மத்திய அரசு என்று குறிப்பிடாமல், ஒன்றிய அரசு என்று விஜய் குறிப்பிட்டு பேசியதும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

சற்று முன்