- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை படத்தை தொடர்ந்து நடிகர் சூரிக்கு மீண்டும் வெற்றியை கொடுத்த கருடன், 5 நாட்களில் வசூல்...

விடுதலை படத்தை தொடர்ந்து நடிகர் சூரிக்கு மீண்டும் வெற்றியை கொடுத்த கருடன், 5 நாட்களில் வசூல் இவ்வளவா? – ஹீரோ ரூட் கிளியரா இருக்குப்பா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமானவர் நடிகர் சூரி. காதல், தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் துணை நடிகர்களில் ஒருவராக திரையில் காணப்பட்ட அவர், வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார். அந்த படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

அந்த படத்தை தொடர்ந்து சூரிக்கு பட வாய்ப்புகள் வரத்துவங்கின. வருத்தப்படாத வாலிபர் சங்கம், மனங்கொத்தி பறவை, சீமராஜா, கடைக்குட்டி சிங்கம், சுந்தரபாண்டியன், நம்ம வீட்டுப்பிள்ளை, மருது, அண்ணாத்த, அழகர் சாமியின் குதிரை, குள்ள நரிக்கூட்டம், வேதாளம், ஜில்லா, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவரது காமெடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.

தொடர்ந்து, முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்த சூரிக்கு காமெடி நல்ல விதமாக கை கொடுத்ததால், முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக மாறினார். இவர் காமெடி நடிகராக வளரத் துவங்கிய நேரத்தில், காமெடியில் முன்னணியில் இருந்த நடிகர் சந்தானம், ஹீரோவாக நடிக்க துவங்கி விட்டதால் அந்த இடத்தில் வெகுஎளிதாக சூரிக்கு காமெடி வாய்ப்புகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து காமெடி நடிப்பில் ஜொலித்து வந்த சூரியை இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படம் மூலம் கதாநாயகனாக மாற்றினார். விடுதலை படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கேரக்டரில் சூரியின் வெகு யதார்த்தமான நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு அந்த படத்தில் சூரியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு இன்னும் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை படத்தைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்த படம் கருடன். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற படத்திலும் சூரி கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொட்டுக்காலி படமும் மிக விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கடந்த 30ம் தேதியன்று சூரி நடிப்பில் கருடன் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சசிக்குமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கருடன் முதல் நாளிலேயே 4 கோடி ரூபாய் வசூலித்தது. 2வது நாளில் 6 கோடி ரூபாய் வசூலித்தது. ஐந்து நாட்களில் கருடன் படம் உலகம் முழுவதும் 26 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்துள்ளதால், கருடன் படத்தின் வசூல் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்