நடிகர் சூரி, தமிழில் காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பரோட்டா சாப்பிடும் போட்டியில் அவரது நடிப்பு, வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பெரிய அளவில் ரீச் ஆனது. தொடர்ந்து நடிகர் சிவகார்த்தியேனும், சூரியும் இணைந்து நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
காமெடி நடிப்பில் முன்னணி நடிகராக மாறிய சூரி, பல வெற்றிப் படங்களில் நடித்தார். இந்த சூழலில், இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூரியை கதாநாயகனாக மாற்றி, அவரது இயக்கத்தில் உருவான விடுதலை படத்தில் குமரேசன் என்ற கான்ஸ்டபிள் கேரக்டரில் நடிக்க வைத்தார். அந்த நடிப்பில் சூரியும் அழுத்தமான நடிப்பை தந்தார்.
அதன்பிறகு துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்த கருடன் படம் வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சசிக்குமார், உன்னி முகுந்தன், ரோஷிணி, ஷிவதா, வடிவுக்கரசி, மைம்கோபி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இதில் சொக்கன் என்ற கேர்கடரில் விசுவாசும் மிக்க ஒரு வேலைக்காரன் கேரக்டரில் சூரி, மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் யார் நடித்தாலும், அவர்களிடம் இருந்து சிறப்பான நடிப்புதான் வெளிப்படும். ஆனால் கருடன் படத்தில் சூரியின் சிறப்பான நடிப்புதான் அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்ற நிலையில், இந்த படமும் சூரிக்கு பெரிய வெற்றியை, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுத் தந்தது.
கருடன் படத்தை தொடர்ந்து சூரி நடிப்பில் கொட்டுக்காளி என்ற படம் வெளியாக இருக்கிறது. அதே போல் விடுதலை படத்தின் 2ம் பாகமும் விரைவில் வெளிவர இருக்கிறது. குறிப்பாக விடுதலை 2 தீபாவளிக்கு பண்டிகைக்கு வெளியிடும் திட்டத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இருக்கிறார். அதற்காக படப்பிடிப்பு ஜரூராக நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று தனது வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் சூரி, கருடன் படத்துக்கு நீங்கள் தந்த அன்புக்கும், வரவேற்புக்கும் மிக்க நன்றி. அதனால்தான் எங்களுக்கு மகிழ்ச்சியும், நம்பிக்கையும் நிறைய கிடைத்தது. இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் கருடன் ரிலீஸ் ஆகியுள்ளது. தியேட்டரில் இருந்த படத்தை பார்க்காதவர்கள், அமேசான் ப்ரைம் தளத்தில் படத்தை மிஸ் பண்ணாமல் பார்த்து, இதிலும் ஒரு பெரிய வெற்றியை கொடுங்கள், என்று வேண்டுகோள் விடுத்து பேசியிருக்கிறார்.





