- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் என் மகளை நினைத்து அழுவேன் - வெளிப்படையாக பேசிய நடிகர்...

அந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் என் மகளை நினைத்து அழுவேன் – வெளிப்படையாக பேசிய நடிகர் சூர்யா!

- Advertisement -

நடிகர் சூர்யா நடிகை பூஜா ஹெக்டே இணைந்து நடித்த ரெட்ரோ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைத்து வருகிறது. இந்த படத்தில் ஸ்வாசிகா மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நாசர் ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

ரெட்ரோ படம் ரிலீஸை முன்னிட்டு நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இருவரும் இணைந்து ஒரு நேர்காணலில் பங்கேற்றனர். அப்போது பேசிய நடிகர் சூர்யா, சந்தோஷ் நாராயணன் இசையமைத்த ஒரு பாடல் குறித்து மிகவும் எமோஷனலாக பேசினார். அந்த பாடல் சித்தா படத்தில் இடம்பெற்றது.

அப்போது நடிகர் சூர்யா கூறியதாவது, வாழ்க்கையில் நம்முடன் கனெக்ட் ஆகும் சில பாடல்கள் எப்போதுமே நம்முடன் இருக்கும். என் உணர்வுகளை இன்னும் உண்மையானதாக மாற்றும். இப்போது என் மகள் அமெரிக்காவுக்கு படிக்கப் போனதால் அடிக்கடி சித்தா பாட்டுதான் கேட்கிறேன். அந்த பாடலைக் கேட்கும் போது தாரை தாரையாக அழுகை வருகிறது.

நான் ஒரு நாள் நைட் 3 மணிக்கு ஷூட்டிங்கில் இருந்த போது என் மகள் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தார். என்று வெளிப்படையாக நடிகர் சூர்யா கூறியிருக்கிறார். அவர் அமெரிக்கா செல்வது பற்றி அதில் கூறியிருந்தார். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை.

அப்போது நான் தற்செயலாக அந்த பாட்டை கேட்டுக்கொண்டு இருந்தேன். என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அழுகை வரத் துவங்கிவிட்டது. நான் ஏற்கனவே சந்தோஷ் நாராயணன் சித்தார்த் பாடுவதை பார்த்திருக்கிறேன். அந்த பாடலை கேட்டிருக்கிறேன். ஆனால் உண்மையான எமோஷனலோடு கலந்த பிறகு இனி அந்த பாடலை எங்கு கேட்டாலும் எனக்கு அந்த நாள்தான் நினைவுக்கு வரும் என்று நடிகர் சூர்யா வெளிப்படையாக கூறினார்.

அப்போது அருகில் இருந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறுகையில், சித்தா படம் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் அந்த பாடலை ஒரு கிப்ட் ஆக நான் பண்ணிக் கொடுத்தேன். முடிந்தால் இந்த பாடலை படத்தில் வைங்க. இல்லை என்றால் சும்மா ரீல்ஸ் மாதிரி செய்ங்க என்று சொல்லிதான் கொடுத்தேன் என்று கூறியிருக்கிறார். இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்த சித்தா என்ற படத்தில் இடம்பெற்ற அந்த பாடல், என் பார்வை உன்னோடு உன் பொம்மை என்னோடு என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்