- Advertisement -
Homeபொழுதுபோக்குநடந்து வரும் போரால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்கள், அதற்கு மௌன சாட்சியாக இந்த ...

நடந்து வரும் போரால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்கள், அதற்கு மௌன சாட்சியாக இந்த படம் – வெளிப்படையாக பேசிய நடிகர் சூர்யா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் சூர்யா. திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மேலும் தனது அப்பா சிவக்குமார் தம்பி கார்த்தி மனைவி ஜோதிகாவுடன் இணைந்து அகரம் பவுண்டேசன் என்ற கல்வி அறக்கட்டளை நிறுவனமும் 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அடுத்து சூர்யா நடித்த கருப்பு படம் திரைக்கு வர உள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனமும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தயாரிப்பு நிறுவனமும் முதல் முறையாக இணைந்து நீளிரா என்ற படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை இலங்கை தமிழர் சோமிதரன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நவீன் சந்திரா விது ஆகியோர் பிரதான கேரக்டரில் நடித்துள்ளனர்.

- Advertisement -

நீளிரா படத்திற்கு சிவாபத்மயன் இசையமைத்துள்ளார். இலங்கையில் போர் பதட்டமான சூழ்நிலைக்கு நடுவே ஒரு திருமணம் நடக்கிறது. அதில் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் உணர்ச்சிபூர்வமான கதைக்களமாக உள்ளது. நீளிரா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நீளிரா படம் குறித்து நடிகர் சூர்யா ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் நடிகர் சூர்யா கூறியிருப்பதாவது, நீளிரா என்றால் நீண்ட இரவு என்று அர்த்தம். சமகாலத்தில் நடக்கும் போர்களால் நம்முடைய அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதில் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவது சாதாரண எளிய மக்கள் தான்.

- Advertisement -

ஒரு போர் சூழலில் ஒரு கல்யாணம் நடக்கிறது. அந்த இரவை எப்படி கடக்கிறார்கள்? எத்தனை பேர் பிழைக்கிறார்கள் என்பதை எமோஷனல் திரில்லராக இந்த படம் இயக்கப்பட்டுள்ளது. அந்த இரவை உணர்ந்தவர், அந்த இரவை கடந்தவரே இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இலங்கைத் தமிழர் நண்பர் சோமிதரன்.

கடந்தகால போர் இப்போது இருக்கிற சூழல் இதற்கெல்லாம் ஒரு மௌன சாட்சியாக இந்த படம் நம் எல்லோரது மனசிலும் நிலைத்து இருக்கும் என்று நான் நம்புகிறேன். இது போரை விரும்பாதவர்களுக்கான ஒரு படம் என்று நடிகர் சூர்யா நீளிரா படத்தை பாராட்டி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்