- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்பு பிறந்த நாளில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு குவியும் வாழ்த்துகள், அட இப்படி ஒரு தரமான சம்பவமும்...

சிம்பு பிறந்த நாளில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு குவியும் வாழ்த்துகள், அட இப்படி ஒரு தரமான சம்பவமும் நடந்திடுச்சா? – எஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக முக்கிய இடத்தில் இப்போது இருக்கிறார். இதுவரை அவரது நடிப்பில் 22 படங்கள் மட்டுமே வெளிவந்து இருக்கின்றன. இதில் சில படங்கள் தவிர பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக இருந்திருக்கின்றன. போதிய வரவேற்பை பெறாத படங்கள் கூட தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டத்தை தரவில்லை.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தனது 25வது படமான பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மொழிப்போர் தியாகி இராசேந்திரன் என்பவரது கேரக்டரில் நடித்து வருகிறார். தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக பயோபிக் கதையில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

- Advertisement -

ஏனெனில் கடந்த ஆண்டில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் படத்திலும், முகுந்த வரதராஜன் என்ற மறைந்த ராணுவ மேஜர் வாழ்க்கை வரலாறு கதையில்தான் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அந்த படமும் அபார வெற்றியை பெற்று வசூலை குவித்தது.

திருச்சியை சேர்ந்த சிவகார்த்திகேயன், போலீஸ் அதிகாரியின் மகன். கல்லூியில் இன்ஜினியரிங் படிக்கும் போதே விஜய் டிவியில் நடந்த ஆடிஷனில் பங்கேற்றவர். பிறகு அது இது எது என்ற காமெடி ஷோவை காம்பியராக சிவகார்த்திகேயன் பிரமாதமாக நடத்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார். தவிர மிமிக்ரி டான்ஸ் போன்றவற்றிலும் சிவகார்த்திகேயன் அப்போதே அசத்தியவர்.

- Advertisement -

பிறகு மெரினா படம் மூலம் சிவகார்த்திகேயனை நடிகராக இயக்குனர் பாண்டிராஜ் அறிமுகம் செய்தார். எதிர்நீச்சல் மனம் கொத்திப் பறவை வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் ரெமோ வேலைக்காரன் என பல படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். முதல் படத்தில் சம்பளமாக ரூ. 10 ஆயிரம் வாங்கியவர், இப்போது 25வது படத்துக்கு ரூ. 75 கோடி வாங்குகிறார்.

இன்று நடிகர் சிம்பு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதே நேரத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துகள் குவிகிறது. பல நடிகர்கள் இயக்குனர்கள் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார். கடந்த 2012ம் ஆண்டில் பிப்ரவரி 3ம் தேதி தான் சிவகார்த்திகேயன் நடித்த மெரினா படம் வெளியானது. தமிழ் சினிமாவில் நடிகராக சிவகார்த்திகேயன் 13 ஆண்டுகளை இன்று நிறைவு செய்திருக்கிறார். அதனால் அவருக்கு பலரும் வாழ்த்துகளை பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்