- Advertisement -
Homeபொழுதுபோக்குவாடிவாசல் படத்துக்கு பிறகு நடிகர் சூர்யா யாருடன் கை கோர்க்கப் போகிறார்? - கொல மாஸ்...

வாடிவாசல் படத்துக்கு பிறகு நடிகர் சூர்யா யாருடன் கை கோர்க்கப் போகிறார்? – கொல மாஸ் சாரே என குதூகலிக்கும் சூர்யா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் சூர்யா. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அவர் நடிப்பில் வெளிவந்த 10 படங்களும் பலத்த தோல்வியை சந்தித்தன. நேரடியாக ஓடிடியில் வெளியான ஜெய்பீம் சூரரைப் போற்று ஆகிய 2 படங்கள் மட்டுமே வணிக ரீதியான வெற்றியை பெற்றன.

கடைசியாக சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை ரசிகர்கள் மிக மோசமாக விமர்சித்தனர். அடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ரெட்ரோ. இந்த படம் வருகிற மே 1ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் மற்றும் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஏற்கனவே மௌனம் பேசியதே ஆறு ஆகிய படங்களில் திரிஷா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சூர்யா திரிஷா ஜோடி சேரும் 3வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நடிகர் சூர்யா ஜெய்பீம் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை தொடர்ந்து தனது 45வது படத்திலும் வக்கீல் கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜியே வில்லனாக வக்கீல் கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்துக்கு பேட்டைக்காரன் என பெயர் வைக்கப்படுவதாக தகவல் உள்ளது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பேட்டைக்காரன் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இயக்குனர் அமீர் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்த படங்களுக்கு பிறகு நடிகர் சூர்யா மலையாள பட நடிகர் மற்றும் இயக்குனர் பசில் ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இருவரும் சமீபத்தில் நேரில் சந்தித்து கதை குறித்து பேசியுள்ளனர். அப்போது சூர்யா ஓகே கூறிய நிலையில், சூர்யாவின் 47வது படம் மலையாள இயக்குனர் மற்றும் நடிகர் பசில் ஜோசப் இயக்குவது உறுதியாகிவிட்டது. பசில் ஜோசப் கேரளாவைச் சேர்ந்தவர். இவர் மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்தவர். அவரே நாயகனாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். அதனால் நிச்சயமாக அவரது இயக்கத்தில் சூர்யா நடித்தால், அந்த படம் மாபெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்