- Advertisement -
Homeபொழுதுபோக்குசூடு பிடிக்கும் அமீர் - ஞானவேல் ராஜா விவகாரம்... வெற்றிமாறனுக்கு சூர்யா போட்ட கண்டிஷன்... இது...

சூடு பிடிக்கும் அமீர் – ஞானவேல் ராஜா விவகாரம்… வெற்றிமாறனுக்கு சூர்யா போட்ட கண்டிஷன்… இது என்ன புது கூத்தா இருக்கு…

- Advertisement -

பருத்திவீரன் படம் தொடர்பாக அமீர் – ஞானவேல் ராஜா இடையேயான பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம், தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக முக்கியமான திரைப்படம் என்று கூறலாம். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை ட்ரெண்ட் செட்டராக மாற்றி அமைக்கும் திரைப்படங்களில் ஒன்றாக பருத்திவீரன் இருந்தது.

செய்யும் தவறுகளை கண்டு கொள்ளாமல் வாழும் இளைஞன், அவனை வெறித்தனமாக காதலிக்கும் இளம் பெண், இவர்களுக்குள் இருக்கும் காதல், அத்தனையும் தாண்டி சாதி வெறி என ஒட்டுமொத்த கதைக்களத்தையும் பரபரப்பாக வைத்து திரைக்கதையில் விறுவிறுப்பு கூட்டி சுவாரஸ்ய படுத்தியிருப்பார் இயக்குனர் அமீர். இதில் முத்தழகாக வாழ்ந்த பிரியாமணி தேசிய விருதை பெற்றார்.

- Advertisement -

பருத்திவீரன் திரைப்படத்திற்கு பிறகு ஏராளமான திரைப்படங்கள் மதுரையை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்டன. இன்றளவும் கிராமத்தில் எடுக்கப்படும் திரைப்படங்களில் பருத்திவீரன் சாயல் இருக்கத்தான் செய்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படி பல்வேறு விஷயங்களுக்கு பெயர் போன பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக இயக்குனர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே மோதல் எழுந்தது.

இது தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேசியிருந்த ஞானவேல் ராஜா, இயக்குனர் அமீர் பொய் கணக்கு தன்னிடம் காட்டி விட்டதாக கூறினார். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்ப, அமீருக்கு இயக்குனர் சசிக்குமார் சமுத்திரக்கனி ஆகியோர் ஆதரவாக பேசினர். படத்தை பாதியிலேயே ஞானவேல் ராஜா விட்டு விட்டு ஓடி விட்டதாகவும், அமீர் தனது உறவுக்காரர்களிடம் கடன் வாங்கி இந்த படத்தை எடுத்து முடித்தார் என்றும் சமுத்திரக்கனி பேசியிருந்தார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது. இப்படியான சூழலில், வாடிவாசல் திரைப்படத்தில் அமீருடன் சூர்யா நடிக்க மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இதற்கான முன்னெடுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நடைபெற்று வரும் சூழலில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வாடிவாசலில் அமீர் நடிப்பதாக வெற்றிமாறன் கூறி இருந்தார்.

இந்நிலையில் அமீருக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே மீண்டும் உரசிக்கொள்ள, ஞானவேல் ராஜாவின் ஆதரவாளர் சூர்யா என்பதால் வாடிவாசலில் அவருடன் சேர்ந்து நடிக்க நடிகர் தயங்குகிறாராம். அவர் வேண்டவே வேண்டாம் என்று சூர்யா சொல்ல, வெற்றிமாறனும் அமீர்தான் வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இயக்குனரும் நடிகரும் முட்டிக் கொள்ள தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்