- Advertisement -
Homeபொழுதுபோக்குவருகிற 27ம் தேதி கூலி படம் இசை வெளியீட்டு விழா… சர்ப்ரைஸ் எதுவும் இருக்கிறதா ரசிகர்களுக்கு…?...

வருகிற 27ம் தேதி கூலி படம் இசை வெளியீட்டு விழா… சர்ப்ரைஸ் எதுவும் இருக்கிறதா ரசிகர்களுக்கு…? – மௌனம் காக்கும் லோகேஷ் கனகராஜ், சன் பிக்சர்ஸ் நிறுவனம்!

- Advertisement -

லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் வேட்டையன். கடந்தாண்டில் வெளியானது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் தெலுங்கு இந்தி மலையாளம் கன்னட மொழிகளில் வெளியாகிறது. கூலி படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் கன்னட நடிகர் உபேந்திரா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா மலையாள நடிகர் சௌபிர் ஷாகிர் இந்தி நடிகர் அமீர்கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

மேலும் ஒரு சிறப்பு அம்சமாக இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டமும் போட்டிருக்கிறார். சமீபத்தில் கூலி படத்தில் இருந்து வெளியான சிக்கிடு பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வைரலாகி இருக்கிறது. இந்த பாடல் காட்சியில் இசையமைப்பாளர் அனிருத் நடிகர் டி ராஜேந்தர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் இணைந்து நடனமாடி அசத்தி இருந்தனர்.

இந்நிலையில் கூலி படத்தில் இசை வெளியீட்டு விழா வருகிற 27ம் தேதி சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1975ம் ஆண்டில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கியிருந்தார்.

சரியாக இப்போது 50 ஆண்டுகள் ஆன நிலையில், 2025ம் ஆண்டில் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படம் வெளியாகிறது. இந்த ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் தனது 50வது பொன்விழா ஆண்டை தமிழ் சினிமாவில் கொண்டாடி வருகிறார். அதனால் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ள கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தின் பொன்விழா ஆண்டும் கொண்டாடப்படுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதா? மேலும் இந்த விழாவில் மற்ற மொழிகளை சேர்ந்த பிரபல முன்னணி நட்சத்திர நடிகர்கள் கலந்து கொள்ள போகிறார்களா? ரஜினிக்கு இந்த இசை வெளியீட்டு விழாவில் 50வது ஆண்டு பொன்விழா பாராட்டு விழா நடக்குமா, அதற்கான ஏற்பாடுகளை ரகசியமாக செய்து வருகிறார்களா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சற்று முன்