தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனங்களை வென்றவர் எஸ்வி சேகர். கடந்த 1980 90களில் ஏராளமான படங்களில் காமெடி ரோலில் நடித்து அசத்தியவர். குறிப்பாக இயக்குனர் விசு இயக்கிய பல படங்களில் எஸ்வி சேகர் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். மேலும் நாடகப்பிரியா என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மேடை நாடகங்களை நடத்தியவர்.
தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி அரசியல் களத்திலும் ஆர்வம் காட்டிய நடிகர் எஸ்வி சேகர். அப்போது அரசியல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். இவர் மைலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை நடிகர் எஸ்வி சேகர் வெளியிட்டு இருந்தார்.
மறைந்த முன்னாள் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவுடன் எஸ்வி சேகர் அமர்ந்து இருக்கும் ஒரு புகைப்படத்தை அதில் வெளியிட்டு இருந்தார். சுமார் 400 ஓட்டில் நான் ஜெயித்த போட்டி. மிகவும் நேர்மையாக பரிசு பணத்தை கொடுத்து அனுப்பிய சில்க் என்றும் அதில் எஸ்வி சேகர் பதிவிட்டு இருந்தார். அதைப் பார்த்து அனைவருக்கும், அது என்ன போட்டி? எஸ்வி சேகர் சில்க் ஸ்மிதாவை எப்படி ஜெயித்தார் என்ற கேள்வியும் சந்தேகமும் ஏற்பட்டது.
அதற்கான விடையும் அந்த பதிவில் கீழேயே இருந்தது. அப்போது வார பத்திரிகை ஒன்றில் வந்த படம் தான் எஸ்வி சேகர் பதிவிட்ட படமாகும். அந்த படத்துக்கு கீழே நடிகர் எஸ்வி சேகர் கூறியிருந்ததாவது, இது ஒரு சவால் போட்டோ. துபாயில் நடிகைகள் மோகினி ரோகிணி ஆகியோருடன் தனித்தனியாக நான் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். அந்த புகைப்படங்களை பார்த்த நடிகை சில்க் ஸ்மிதா என்னிடம், உங்கள் சிரிப்பு ரொம்பவும் செயற்கையாக இருக்கிறது என்றார்.
உடனே நான், நாம் ரெண்டு பேரும் சிரிக்கிற மாதிரி ஒரு போட்டோ எடுத்துக்குவோம். அதில் யாருடைய சிரிப்பு ரொம்ப நேச்சுரலாக இருக்குன்னு ஒரு போட்டி வைப்போம். என்னுடையது என்றால் போட்டியை நடத்துகிற பத்திரிகை பணம் கொடுத்துவிடும். நீங்க ஜெயித்தால் அந்த பரிசு பணத்தை நீங்களே கொடுத்துடுங்க என்று சொன்னேன். சில்க் ஸ்மிதாவும் அதற்கு சரி என்று சம்மதித்தார். அதன் பிறகு நானும் சில்க் ஸ்மிதாவும் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பத்திரிகை சார்பில் போட்டி நடத்தப்பட்டது.
அதில் எங்கே எழுதுங்கள் பார்ப்போம் யாருடைய சிரிப்பு இயற்கை? பரிசுத்தொகை ரூ. 250 என்றும் அதில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் தான் நடிகர் எஸ்வி சேகர் வெற்றி பெற்றிருக்கிறார். எஸ்வி சேகரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் எஸ்வி சேகர் ஜெயித்ததும் அதற்கான பரிசு தொகையை நடிகை சில்க் ஸ்மிதா வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.





