- Advertisement -
Homeபொழுதுபோக்குகாமெடி நடிகர் தாடி பாலாஜி செய்த தரமான சம்பவம், விஜய் கட்சியில் மாநில பதவி கன்பார்ம்...

காமெடி நடிகர் தாடி பாலாஜி செய்த தரமான சம்பவம், விஜய் கட்சியில் மாநில பதவி கன்பார்ம் ஆயிடும் போல… – தளபதி ரசிகர்கள் உற்சாகம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய், இப்போது அவரது 69வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர் ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தவர். இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தை முடித்த பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்துள்ள விஜய், ஷூட்டிங்கை வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் முடிக்க உள்ளார். பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சி பணிகளில் முழு தீவிரமாக இறங்கி, தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

- Advertisement -

ஏற்கனவே விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்தி முடித்துள்ள விஜய், அடுத்தகட்டமாக தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டு தொகுதி வாரியாக மக்களை சந்தித்து, தனது கட்சிக்கு ஆதரவு திரட்ட திட்டமிட்டு வருகிறார்.

நடிகர் விஜயுடன் பல படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் தாடி பாலாஜி. நடிகர் விஜயுடன் லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், நிலவே வா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பல படங்களில் வடிவேலுவுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தும் பிரபலமானவர்.

- Advertisement -

சமீபகாலமாக விஜய் டிவி நிகழ்ச்சியில் தாடி பாலாஜி பங்கேற்று வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக தாடி பாலாஜி பங்கேற்றார். இந்த சூழலில் தற்போது நடிகர் விஜயின் தவெக கட்சியில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். விஜய் நடத்திய அரசியல் மாநாட்டிலும் கலந்துக்கொண்டார். விஜயை, தலைவர் என்றும் கூறி வருகிறார்.

இந்நிலையில், காமெடி நடிகர் தாடி பாலாஜி தனது இடதுபுற மார்பு பகுதியில் விஜயின் உருவ படத்தை பச்சை குத்தியுள்ளார். அதன் கீழ் என் நெஞ்சில் குடியிருக்கும்… என்ற விஜயின் பிரபல வாசகத்தையும் பச்சையாக குத்தியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், சட்டையில் அவர் உருவபடம் இருந்தால் கழட்டி விடுவோம். இப்படி நெஞ்சில் உருவப்படத்தை வரைந்து அவர்மீதான அன்பை காட்டுவதில் எனக்கு பெருமையாக உள்ளது, என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்