தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் நிறைய படங்களில் நடித்தவர் நடிகர் தியாகு. காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் தியாகு நடித்திருக்கிறார் குறிப்பாக விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான தியாகு பல படங்களில் விஜயகாந்துடன் இணைந்து நடித்திருக்கிறார். இதுவரை அவர் தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக கிழக்குவாசல் என்புருஷன்தான் எனக்கு மட்டும்தான் பொங்கலோ பொங்கல் ஒரு தலை ராகம் மாநகர காவல் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை பணக்காரன் கூலிக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடிகர் தியாகு நடித்திருக்கிறார். இப்போது முதுமை காரணமாக தியாகு படங்களில் நடிப்பதில்லை. குறிப்பாக தனது உயிர் நண்பர் விஜயகாந்த் மறைவுக்கு பின் படங்களில் நடிப்பதில்லை.
நடிகர் தியாகவின் மகன் சாரங்கன் இயக்குனராக ஆரோமலே என்ற படத்தில் அறிமுகம் ஆகிறார். இவர் ஏற்கனனே இயக்குனர் கௌதம் மேனனிடம் சில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். ஆரோமலே படத்தில் ஆனந்தம் சீரியல் நடிகை பிருந்தா தாஸின் மகன் கிஷன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் முதல் நீ முடிவும் நீ, தருணம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர். ஆரோமலே படம் ரொமாண்டிக் காமெடி வகை படமாக உருவாகியுள்ளது.
மினி ஸ்டுடியோ என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்துக்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். படத்தில் கிஷன் தாஸ், ஹர்ஷத்கான் சிவாத்மிகா ராஜசேகர் மற்றும் மேகா ஆகாஷ் விடிவி கணேஷ் துளசி சிபி ஜெயக்குமார் நம்ரிதா சந்தியா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
ஆரோமலே படம் குறித்து படக்குழு கூறியதாவது, கிஷன்தாஸ் ஹர்ஷத்கான் கூட்டணியில் உருவான இந்த படம் ரசிகர்களை நிச்சயம் ரசிக்க வைக்கும். காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் சிவாத்மிகா ராஜசேகர் ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பார். விடிவி கணேஷ் தனது வழக்கமான காமெடியில் இருந்து மாறுபட்டு புதிய உணர்ச்சி பரிமாணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
மூத்த நடிகை துளசி கிஷன் தாஸின் அம்மாவாக படத்தில் நடித்துள்ளார். புதுமையான கதை சொல்லும் பாணி, ஈர்க்கும் திரைக்கதை, கண்ணுக்குப் பிடித்த காட்சியமைப்புடன் ஆரோமலே படம் ஒரு சிறந்த படைப்பாக உருவாகி வருகிறது என்று படக்குழு உறுதியாக தெரிவித்துள்ளது. நடிகர் தியாகு தனது நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அவரது மகன் சாரங்கன் இயக்குனராக ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பாரா என்பதற்கு ஆரோமலே படம் தான் பதில் சொல்லும்.





