- Advertisement -
Homeபொழுதுபோக்குதன்னை கடுமையாக விமர்சித்த பத்திரிகை ஆபீஸ்க்கு போன் செய்த அன்றைய திமுக தலைவர் கருணாநிதி -...

தன்னை கடுமையாக விமர்சித்த பத்திரிகை ஆபீஸ்க்கு போன் செய்த அன்றைய திமுக தலைவர் கருணாநிதி – நடிகர் வடிவேலு சொன்ன தகவல்!

- Advertisement -

ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் வடிவேலு கூறியதாவது, ஒரு பத்திரிகையில் கருணாநிதியை அப்படி இப்படி என்று திட்டி எழுதியிருக்காங்க. இவர் காலையில் 4 மணிக்கு எல்லாம் பேப்பரை படிச்சிடுவாராம். அன்னிக்கு அந்த பேப்பரை எடுத்து படிச்சிட்டு அந்த பத்திரிகை ஆபீஸ்க்கு போன் செய்திருக்கிறார். அப்போ போன்ல பேசின எடிட்டர் கிட்ட, நான்தான் கருணாநிதி பேசறேன். இன்னிக்கு இந்த பக்கத்துல என்னை பத்தி திட்டி செய்தி போட்டிருக்கீங்க. அந்த எடத்துல இந்த ன போடக் கூடாது. இந்த ண தான் போடணும். இந்த ல போடக்கூடாது இந்த ள தான் போடணும். அந்த பைய இந்த பையன்னு எழுதியிருக்கீங்க இல்லே. அதுல இந்த ரு போடக்கூடாது இந்த று தான் போடணும். இப்படி நிறைய திருத்தம் சொல்லிட்டு, தமிழை நல்லா கத்துக்கிட்டு தப்பில்லாம திட்டி எழுதுங்க என்ன என்று சொல்லிவிட்டு போனை வெச்சுட்டாராம், அந்த எடிட்டர் அப்படியே ஆடிப் போயிட்டாராம் என்று நடிகர் வடிவேலு அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்