- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவாஜி, நாகேஷ்க்கு அப்புறம் அவர்தான், நான் அவரை பார்த்துதான் நிறைய கத்துக்கறேன் - இப்படி சொன்னது...

சிவாஜி, நாகேஷ்க்கு அப்புறம் அவர்தான், நான் அவரை பார்த்துதான் நிறைய கத்துக்கறேன் – இப்படி சொன்னது இந்த பிரபல நடிகரா

- Advertisement -

தமிழ் சினிமாவில் சிவாஜி தான் நடிப்பு பல்கலை கழகமாக மதிக்கப்படுகிறார். அன்றைய சினிமாவில் சிவாஜி போல நடித்தும், வசனம் பேசியும்தான் பலரும் நடிக்க கற்றுக்கொண்டனர். பட வாய்ப்பு கேட்டு வரும் புதுமுகங்கள், சிவாஜி வசனங்களை பேசி காட்டிதான் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினர். அன்றும் இன்றும் என்றும் நடிப்பில் சிவாஜி ஒரு உச்ச சிகரமாகவே மதிக்கப்படுகிறார்.

அதே வரிசையில், கலைத்துறையில் நாகேஷ்க்கு ஒரு தனியிடம் உண்டு. அவரது நடிப்புக்கென்றே தனியாக படத்தில் காட்சிகள் ஒதுக்கப்படுவது உண்டு. மது, சிகரெட் போன்ற தீய பழக்கங்கள் இருந்தாலும், படப்பிடிப்பு தளத்தில் நடிப்பு என்று வந்துவிட்டால், அவரது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதை எளிதாக வென்றுவிடுவார் நடிகர் நாகேஷ்.

இன்று உலகநாயகன் என அழைக்கப்படும் கமல்ஹாசன், நடிப்பில் தனது குருவாக குறிப்பிடுவது சிவாஜி மற்றும் நாகேஷ் ஆகிய இரண்டு பேரை மட்டும்தான். அதே போல், கே, பாலசந்தர் பல இடங்களில் ஒரு நடிகரை பாராட்டி பாராட்டி பேசி இருக்கிறார் என்றால், அதுவும் நாகேஷ் என்ற அபூர்வ நடிகரை பற்றி மட்டும்தான். இப்படி சினிமாவில் நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருப்பவர்களை. காலம் மக்களை விட்டு பிரித்தாலும், கலையால் இன்னும், இன்றும் ரசிகர்களின் மனங்களில் சிவாஜி, நாகேஷ் போன்ற சிறந்த கலைஞர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

நடிகர் குரு சோமசுந்தரம், தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக தன்னை வெளிப்படுத்திக்கொண்டு வருபவர். பல படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். ஜோக்கர் என்ற படத்தில், மனநலம் தவறிய மக்கள் ஜனாதிபதியாக அவரது நடிப்பு, ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை, பாராட்டை பெற்றது. கூத்துப்பட்டறை கலைஞர் என்பதால், இயல்பான நடிகராக அவர், தமிழ் சினிமாவில் தனிமுத்திரை பதித்து வருகிறார்.

இந்நிலையில், மிகச்சிறந்த நடிகர் வரிசையில் உள்ள குரு சோமசுந்தரம், நடிப்பில் தனது வழிகாட்டியாக, நகைச்சுவை நடிகர் வடிவேலுவை குறிப்பிட்டு கூறியிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த குரு சோமசுந்தரம் கூறுகையில், வடிவேலு அண்ணன், ஒண்டர்புல் ஆக்டர். அவரை போல கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இதுவரை நான் பார்த்த நடிகர்களில் சிறந்த நடிகராக அவரை நான் பார்க்கிறேன். சிவாஜி, நாகேஷ் போன்றவர்கள் லெஜன்ட். அந்த வரிசையில், இப்போது சிறந்த நடிகராக இருப்பவர் நடிகர் வடிவேலுதான். உடல் மொழி, கெட்டப், நடிப்பு என பல விஷயங்களில் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். அவரது பழைய படங்களில் கூட அவரது நடிப்பும், உடல் அசைவுகளும் மிக சிறப்பாக இருக்கும், என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்