- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி 170 படத்தை புறக்கணிப்பதாக வந்த டிவிட்டர் பதிவால் திடீர் பரபரப்பு - ரஜினியும் விஜய்...

ரஜினி 170 படத்தை புறக்கணிப்பதாக வந்த டிவிட்டர் பதிவால் திடீர் பரபரப்பு – ரஜினியும் விஜய் மாதிரி ஏதாவது பேசிட்டாரா, என்ன தலைவா இதெல்லாம்

- Advertisement -

லியோ படம் வருவதற்கு முன்பே, அந்த படத்தின் டிரெய்லர் தீயாய் பற்றி கொழுந்துவிட்டு எரிகிறது. மக்களின் நன்மதிப்பை பெற்ற நடிகர் விஜய், இதுபோன்ற ஒரு வார்த்தையை அவர் பேசலாமா, அதுவும் தம்பி வயதில் உள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தவறாக அந்த வசனத்தை எழுதி தந்திருந்தாலும், அவருக்கு விஜய் அட்வைஸ் செய்து, இதை தவிர்த்திருக்கலாமே என, விஜய் அபிமானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், திடீரென டிவிட்டரில் ஒரு பதிவு வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயிலர் படத்துக்கு பிறகு, ரஜினி 170 படத்தில் ரஜினி நடிக்கிறார். இதற்காக ரஜினிகாந்த் திருவனந்தபுரம் சென்றுள்ள நிலையில், அங்கு சில தினங்களும் தொடர்ந்து நாகர்கோவிலும் இதன் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜெயிலர் படம் தந்த உற்சாகத்துடன் புது கெட்டப்பில் வாலிபராக ரஜினி காட்சி தரும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார் என முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதால் இப்போதே எதிர்பார்ப்பு, ரசிகர்களிடம் எகிறி அடிக்க துவங்கி விட்டது. படம் துவங்கிய சில தினங்களில் இதுபோன்ற ரஜினி 170 படத்தை புறக்கணிப்போம் சர்ச்சை ஏற்பட்டிருப்பது, அந்த படத்தின் இயக்குநர் தசெ ஞானவேல் மீதான கோபம்தான் என தெரிய வந்துள்ளது.

ரஜினி 170 படத்தின் இயக்குநர் தசெஞானவேல், ஏற்கனவே சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரித்துவிட்டதாக, அந்த படம் வந்தபோதே வன்னியர் அமைப்புகள் கண்டன குரல்களை எழுப்பியது. அதற்காக தசெ ஞானவேல், மன்னிப்பும் கேட்டார்.

எனினும், அந்த படத்தில் தங்களை தவறாக சித்தரித்து விட்டதாக வன்னியர் அமைப்புகள் கோபப்பட்ட நிலையில், தசெ ஞானவேல் மன்னிப்பை ஏற்கவும் இல்லை. அந்த படம் ஏற்படுத்திய பாதிப்பையும் அவர்கள் மறக்கவில்லை. அதனால், இப்போது அவர் இயக்கத்தில் ரஜினி 170 படத்தை புறக்கணிப்பதாக கூறி டிவிட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

வன்னியர் சமுதாய மக்களை தவறாக சித்தரித்து காட்டிய தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்க கூடாது. அப்படி நடித்தால் அந்த படத்தை நாங்கள் புறக்கணிப்போம் என, டிவிட்டர் பதிவின் மூலம் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இனி படம் வெளியாகும் நேரத்தில் மேலும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என பிரச்னைகளை பெரிதாக்குவார்களோ என்ற கலக்கத்தை இப்போது அவர்கள் ஏற்படுத்தி விட்டனர்.

சற்று முன்