நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படப்பிடிப்பு மற்றும் சிஜி சம்பந்தமான அனைத்து வேலைகளும் நிறைவு பெற்ற நிலையில், அவர் சென்னை திரும்பி இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. மங்காத்தா, மாநாடு என பிளாக்பஸ்டர் திரைப்படங்களை எடுத்த வெங்கட் பிரபு, கோட் படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறது. மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, அஜ்மல், வைபவ், ஜெயராம், விடிவி கணேஷ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், இவானா, யுகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதுபோக சினேகா, லைலா, பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கின்றனர்.
படத்தில் டைம் டிராவல் கதை என்பதால் அதற்கான திரைக்கதையில் வெங்கட் பிரபு கூடுதல் கவனம் செலுத்தி இருக்கிறார். இதில், விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். படத்தின் வெளியான போஸ்டரே இதனை உறுதிப்படுத்தியது.
விஜயை இளம் வயதுள்ளவராக காட்ட டி ஏஜிங் தொழில்நுட்பத்தை படக்குழுவினர் பயன்படுத்தியுள்ளனர். இதற்காக விஜய், வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் முகாமிட்டனர். அங்கு, இதற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்றது. சமீபத்தில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வெங்கட் பிரபு, சிஜி பணிகள் முடிவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே விசில் போடு பாடல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் ஒரு பாடலுக்கு திரிஷா நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. மறைந்த நடிகர் விஜயகாந்தை சிஜி தொழில்நுட்பத்தின் மூலம் காட்டுகிறார்கள். இதேபோல் சிவகார்த்திகேயனும் ஒரு காட்சியில் வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களும் படத்தில் வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கலந்து கொண்ட வைபவ், கோட் படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் படத்தில் இரண்டு விஜய் நடிப்பதாக உறுதிப்படுத்திய அவர், இளம் வயது விஜயுடன் தான் நடிப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும், பக்கா ஆக்சன் என்டர்டைனர் திரைப்படமாக கோட் உருவாகி இருப்பதாகவும் வைபவ் கூறியுள்ளார்.





